புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தன் எதிரொளியாக சிகரெட் விலை அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலை விரைவில் 72 ரூபாய்க்கு உயரும். இந்த விலை உயர்வால் புகை பிடிப்பதை நிறுத்துவதை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. விலை உயர்வு வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. நாமக்கல் பகுதியில் உள்ள சிகரெட் ஏஜென்ட் தற்போதைய கிங் சைஸ் உள்ளிட்ட பல உயர் ரக சிகரெட்டுகளை பதுக்கி வைக்க தொடங்கியுள்ளார்.
சிகரெட் ஏஜென்ட் தங்களுடைய விற்பனை பிரதிநிதிகள் மூலமாக சிறிய கடைகளுக்கு தினமும் சிகரெட் சப்பளை செய்து வருகின்றார். கிங் சைஸ் உள்ளிட்ட பல உயர்ரக சிகரெட் ஸ்டாக் இல்லை என்று கூறி வெறும் இரண்டு பாக்கெட் மட்டுமே சப்ளை செய்கின்றார். 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிகரெட் விலை தற்போது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சிகரெட் விலை முன்கூட்டியே அதிகரித்துள்ளது. சிகரெட் விலை பாக்கெட்டுக்கு 20-25 ரூபாய் வரையும், சிகரெட் ஒன்றுக்கு 2-5 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆந்திராவின்…
நடிகர் தனுஷின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சென்னை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில்…
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தங்களது பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட…
தமிழக வெற்றிக் கழகத்தில் பரப்புரைச் செயலாளராகச் செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், கட்சியின் தலைமை மீதும் அண்மையில் பொறுப்புக்கு வந்த…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் இருந்து நாள்தோறும் தலைமைச்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு உறங்கச் சென்ற ஹேமாவதி என்ற ஏழு வயதுச் சிறுமி மறுநாள்…