தமிழக வெற்றிக் கழகத்தில் பரப்புரைச் செயலாளராகச் செயல்பட்டு வரும் நாஞ்சில் சம்பத், கட்சியின் தலைமை மீதும் அண்மையில் பொறுப்புக்கு வந்த ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் மீதும் அதிருப்தியில் இருப்பதாகவும், “இது கட்சி அல்ல, கார்ப்பரேட் கம்பெனி; நான் வெளியேறுவது விலகல் அல்ல, விடுதலை” என்று பேசியதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி காட்டுத்தீபோலப் பரவியது. இடைத்தேர்தல் பரப்புரை மற்றும் கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் அவருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கத்தில்தான் அவர் இங்ஙனம் கூறியதாகப் பேச்சுகள் எழுந்தன.
முன்னதாக, “போனால் போகட்டும் போடா… என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது…” என நாஞ்சில் சம்பத் பதிவிட்டிருந்த கவித்துவமான வரிகளே இந்த ஊகங்களுக்கு வித்திட்டன. எனினும், உடனடியாக இதற்கு விளக்கமளித்த அவர், “உப்பைப் போல எளிமையான, தென்றலைப் போல மென்மையான தலைவர் தளபதி விஜய். அவரது தலைமையை நான் விமர்சித்ததாக இட்டுக்கட்டப்பட்ட பொய்களைச் சிலர் பரப்புகிறார்கள்” என்று கூறி, கட்சித் தலைவர் விஜய்க்கான தனது ஆதரவை உறுதியாக வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் அவர் பெயரில் பரப்பப்பட்ட போலிச் செய்தி குறித்து எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் மிகத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். “தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், எந்த ஃபண்டும் தேவையில்லை, சாலைகள் தரமாக இருந்தால் மட்டும் போதும் என ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நான் வியந்தும் விதந்தும் பேசியிருக்கிறேன். அப்படிப்பட்டவரை நான் குறைத்துப் பேசியதாகச் சிலர் வெளியிடும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தவெக அமைப்பில் பரப்புரைச் செயலாளராகப் பணியாற்றும் தான், கண்ணை மூடும் வரை, கல்லறைக்குப் போகும் வரை இக்கடமையைச் செய்யத் தன்னை அர்ப்பணிப்பதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தன் மீது அவதூறு பரப்பி, தவெகவில் தனக்கிருக்கும் முக்கியத்துவத்தைக் களங்கப்படுத்த முயன்ற எதிர்த்தரப்பின் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதோடு, விஜய் தலைமையிலான ஆட்சியை அமைக்கத் தொடர்ந்து களத்தில் நிற்பேன் என்பதையும் நாஞ்சில் சம்பத் அறுதியிட்டு உறுதிபடக் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் 55 வயதான ஜெயபாலகிருஷ்ணன் என்ற நபர் பரிதாபமாக…
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆந்திராவின்…
நடிகர் தனுஷின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சென்னை ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில்…
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தங்களது பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில் அமைந்துள்ள தமது இல்லத்தில் இருந்து நாள்தோறும் தலைமைச்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு உறங்கச் சென்ற ஹேமாவதி என்ற ஏழு வயதுச் சிறுமி மறுநாள்…