இனி ஒரு தம் விலை ரூ.72… காலையிலேயே ஷாக்…. பரபரப்பு அறிவிப்பு…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தன் எதிரொளியாக சிகரெட் விலை அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலை விரைவில் 72 ரூபாய்க்கு உயரும். இந்த விலை உயர்வால் புகை பிடிப்பதை நிறுத்துவதை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. விலை உயர்வு வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. நாமக்கல் பகுதியில் உள்ள சிகரெட் ஏஜென்ட் தற்போதைய கிங் சைஸ் உள்ளிட்ட பல உயர் ரக சிகரெட்டுகளை பதுக்கி வைக்க தொடங்கியுள்ளார்.

சிகரெட் ஏஜென்ட் தங்களுடைய விற்பனை பிரதிநிதிகள் மூலமாக சிறிய கடைகளுக்கு தினமும் சிகரெட் சப்பளை செய்து வருகின்றார். கிங் சைஸ் உள்ளிட்ட பல உயர்ரக சிகரெட் ஸ்டாக் இல்லை என்று கூறி வெறும் இரண்டு பாக்கெட் மட்டுமே சப்ளை செய்கின்றார். 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிகரெட் விலை தற்போது 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சிகரெட் விலை முன்கூட்டியே அதிகரித்துள்ளது. சிகரெட் விலை பாக்கெட்டுக்கு 20-25 ரூபாய் வரையும், சிகரெட் ஒன்றுக்கு 2-5 ரூபாய்  வரையும் அதிகரித்துள்ளது.