சமீபத்தில் வெளியாகியிருக்கும் திமுகவின் ‘கள ஆய்வு அறிக்கை’ அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. “அதிகாரிகளின் ஆட்சியால் தோல்வி” என்ற அந்த அறிக்கையின் வரிகள் வெறும் அரசியல் அறிக்கை அல்ல, அதுதான் இன்றைய கசப்பான எதார்த்தமான உண்மை என்று திமுக நிர்வாகி ஞா.ஞானராஜ் என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் திமுகவினரால் மிகத் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரு பேரியக்கம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரும்போது, மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கட்சியினரும் மக்கள் பிரதிநிதிகளுமே பாலமாக இருக்க வேண்டும்; ஆனால், இங்கு நிலைமை தலைகீழாக மாறி, மக்களாட்சியில் அதிகாரிகளின் கைகள் ஓங்கியிருப்பதை இந்த ஆய்வு அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல தசாப்தங்களாகக் கட்சிக்காக உழைத்த, தற்போதைய பொறுப்புகளில் இல்லாத மூத்த நிர்வாகிகளின் அனுபவபூர்வமான ஆலோசனைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, அனுபவத்தை விட அதிகாரமே மேலானது என்ற எண்ணம் தலைதூக்கியதன் விளைவே இது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. கட்சி நிர்வாகிகளின் நியாயமான கோரிக்கைகளும், மக்களின் அன்றாடத் தேவைகளும் அதிகார வர்க்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. மேலும், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை விட்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் (MLAs), மூத்த அமைச்சர்களும் மிகவும் விலகிச் சென்றுவிட்டனர் என்றும், தேர்தலின் போது மட்டுமே மக்களைத் தேடிச் சென்றுவிட்டு மற்ற நேரங்களில் எட்டாக்கனியாக இருப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றும் தொண்டர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அடிமட்டத் தொண்டர்களின் வியர்வையிலும் பொதுமக்களின் நம்பிக்கையிலும்தான் எந்தவொரு ஆட்சியும் அமைகிறது என்பதை மறந்துவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அதிகாரத்தை அதிகாரிகளிடமும், ஒரு சில தனிநபர்களிடமும் ஒப்படைத்துவிட்டு அடித்தளமாக இருந்தவர்களை மறந்துவிட்டால் அதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்கு சேகரிக்க கிளம்பி வந்து, அங்கே பொதுமக்களைக் கட்டிப்பிடிப்பது, ரோட்டோரக் கடையில் தோசை சுடுவது, புரோட்டா போடுவது, டீ ஆத்துவது, வயலில் இறங்கி நாற்று நடுவது என அரசியல்வாதிகள் அரங்கேற்றும் போலி நாடகங்களை இதையெல்லாம் பார்த்து ஏமாறுவதற்கு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை என்று கூறி கடுமையாக விமரிசித்துள்ளார். தேர்தல் நேரத்தில் காட்டும் இந்த போலிப் பாசத்தைத் தவிர்த்துவிட்டு, அதிகாரத்துக்கு வந்த பின்பும் மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று அவர்களின் குறைகளைக் கேட்டு அரவணைத்துச் சென்றால் மட்டுமே மக்களின் உண்மையான நம்பிக்கையைப் பெற முடியும்.
தலைமை எவ்வளவுதான் சிறப்பான திட்டங்களைக் கொண்டு வந்தாலும், அதைச் செயல்படுத்தும் களத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் சுணக்கம் காட்டினால், அதன் பாதிப்பு ஒட்டுமொத்த இயக்கத்தையும் சிதைத்துவிடும். எனவே, அதிகார வர்க்கத்தின் பின்னால் ஓடுவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக மக்களை நோக்கி வர வேண்டும் என்பதுதான் இந்த கள ஆய்வு அறிக்கையின் இறுதி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் நேரடியாக மக்களைச் சந்தித்து, தொண்டர்களின் குரலுக்கு உரிய மதிப்பளித்தால் மட்டுமே இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியும் என்றும், தற்போதைய சூழலில் சுயபரிசோதனை செய்து தவறுகளைத் திருத்திக் கொள்வதே அடுத்த கட்ட நகர்வுக்குச் சரியான வழிவகுக்கும் என்றும் திமுகவின் கடைக்கோடி தொண்டனாக ஞா.ஞானராஜ் தனது பதிவில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…