நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சிஜு என்பவருக்கும், கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகா என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு தனது சித்தி வீட்டிற்குச் சென்ற மல்லிகாவைச் சமாதானம் செய்து, சிஜு மீண்டும் அழைத்துச் சென்றுள்ளார்.
நேற்று மாலை இவர்கள் குடும்பத்துடன் காரில் பந்தலூர் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது, மேங்கோ ரேஞ்ச் பகுதியில் வைத்து தம்பதியிடையே மீண்டும் வாக்குவாதம் வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிஜு, மறைத்து வைத்திருந்த கத்தியால் குழந்தைகள் கண்முன்னே மல்லிகாவின் இரு கால்களிலும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் திரண்டதால் சிஜு அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.
காயமடைந்த மல்லிகாவை மீட்ட பொதுமக்கள், அவரை சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மேங்கோ ரேஞ்ச் காவல்துறையினர், மனைவியைக் கத்தியால் தாக்கிய சிஜுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்களைச் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை…
தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டுள்ள திமுகவும், தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த…
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அக்கட்சியினரின் பல்வேறு செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வருகின்றன. அந்த வகையில்,…
தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து விலகுவதாக அறிவித்துள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களைச்…
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அரசியல் பிரிவு தனிச் செயலாளராக 'The Route' நிறுவனரும், விஜய்யின் முன்னாள் மேலாளருமான…
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…