கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பாபாஜான்(40). இவருக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் உள்ளது. அதேபோல கோலார் மாவட்டம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ரமீஜாபி(25). இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது .இவர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது . இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த உள்ளார்கள். இது குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் அவர்களை கண்டித்துள்ளனர். இதனை அடுத்து பாபாஜான் தனது மனைவி பிள்ளைகளை விட்டும், ரமிஜாபி தன்னுடைய கணவர் குழந்தைகளை விட்டும் பிரிந்து இருவரும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் இருவரும் ஒன்றாக அமர்ந்து அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தபோது ரமிஜாபிக்கு போதை தலைக்கேறியுள்ளது. அப்போது மேலும் மது கேட்டு பாபாஜானிடம் அடம் பிடித்துள்ளார். அதற்கு அவர் மது கொடுக்க மறுத்ததால் இருவருடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாபாஜான் வீட்டில் இருந்த அருவாளை எடுத்து ரமிஜாபியை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள் . அப்போது போதை தலைக்கேறியதால் மேலும் மதுபானம் கேட்டு தகராறு செய்ததால் ரமிஜாபியை பாபாஜான் வெட்டி கொன்றது தெரியவந்தது .இதனை அடுத்து காவல்துறையினர் பாபாஜானை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…