“தவறைத் தட்டிக் கேட்ட பயணிக்கு தர்மஅடி!… மனைவி, மகள் கண்முன்னே டிரைவர், கண்டக்டர் செய்த வெறிச்செயல்… தென்னிலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்”…!!!

Spread the love

திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தப்பட்டது. வழக்கமாக அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இலவசமாகத் தேநீர் மற்றும் திண்பண்டங்கள் வழங்கப்படுவதால், அவர்கள் அந்த குறிப்பிட்ட கடையில் பேருந்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் கடையில் ஒரு தேநீரின் விலை 25 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சந்தை விலையை விட கூடுதல் விலைக்குத் தரமற்ற பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணி ஒருவர், ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் இது குறித்துக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“உங்களுக்கு இலவசமாகத் தேநீர் கிடைக்கிறது என்பதற்காக, பயணிகளைச் சுரண்டும் கடையில் ஏன் பேருந்தை நிறுத்துகிறீர்கள்?” என அந்தப் பயணி கேட்டது ஓட்டுநரையும் நடத்துனரையும் ஆத்திரமடையச் செய்தது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, சக பயணிகள் மற்றும் அந்தப் பயணியின் மனைவி, மகள் முன்னிலையிலேயே ஓட்டுநரும் நடத்துனரும் அவரைச் சரமாரியாகத் தாக்கினர். “அடிக்காதீங்க அண்ணா… அடிக்காதீங்க” என்று அந்தச் சிறுமியும் அவரது தாயாரும் கதறி அழுதும், ஆவேசமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் எவ்வித மனிதாபிமானமுமின்றித் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர்.

இந்தக் கொடூரமான தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு ஊழியர்களே, நியாயம் கேட்ட பயணியைக் குடும்பத்தினர் முன்னிலையில் தாக்கியது கண்டிக்கத்தக்கது எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் சுயநலத்திற்காகப் பயணிகளின் பணம் மற்றும் மரியாதையைப் பணையம் வைக்கும் இத்தகைய போக்குக் கண்டிக்கத்தக்கது. வன்முறையில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது போக்குவரத்துத் துறை உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“41 வயசாகிடுச்சி இன்னும் எனக்கு அது நடக்கல” எங்க வீட்ல கொஞ்சம் சொல்லுங்க சார்.. குடும்பத்தினர் மீதே போலீசில் புகார் அளித்த பெண்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில்…

7 minutes ago

“கை, காலை உடைச்சா கூட பரவால்ல கொன்னுட்டாங்களே…” விபத்தை ஏற்படுத்திய கணவர்… உறவினர்களால் கதறிய மனைவி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார் மோதிய விபத்தில் பெண்ணொருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டதற்காக, தொழிலதிபர் ஒருவரை ஒரு கும்பல்…

18 minutes ago

ராகுல் காந்தி காட்டிய க்ரீன் சிக்னல்?…தவெக-வுடன் கூட்டணி வைக்க டெல்லி தலைமைக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்… ஜோதிமணி எம்பியின் அந்த ஒற்றைப் பதிவு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…

50 minutes ago

#JUST IN: நள்ளிரவில் விஜய்க்கு அதிர்ச்சி… த.வெ.க வேட்பாளர் அலுவலகத்திற்கு தீ வைப்பு… பெரும் பரபரப்பு…!

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின்…

56 minutes ago

வாகனம் போன அடுத்த செகண்ட்…. சல்லிசல்லியாய் விழுந்த பிரம்மாண்ட கட்-அவுட்….! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட்…

58 minutes ago

“லிஸ்ட் ரெடி.. ஆப்பு நிச்சயம்”… கரூரில் இருந்து வந்த ‘ஸ்பெஷல் டீம்’.. சிக்கப்போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?”….!

கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…

1 மணத்தியாலம் ago