பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட் திடீரென சரிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த பிரம்மாண்ட கட்-அவுட் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. அந்த வழியாக ஒரு வாகனம் கடந்து சென்ற சில நொடிகளிலேயே இந்த விபத்து நடந்ததால், நூலிழையில் பெரிய உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இவ்வளவு உயரமான கட்-அவுட் விழுந்தது அந்தப் பகுதியில் பெரும் அச்சத்தை உண்டாக்கியது. மழைக்காலங்களில் திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்படும் கட்-அவுட்களின் உறுதித்தன்மையை அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில்…
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார் மோதிய விபத்தில் பெண்ணொருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டதற்காக, தொழிலதிபர் ஒருவரை ஒரு கும்பல்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின்…
கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உலக நாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் 'War Powers'…