உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு 41 வயதாகியும் தனது குடும்பத்தினர் இதுவரை திருமணம் செய்து வைக்கவில்லை என்றும், தான் ஒருபோதும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர் தனது புகாரில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரர்கள் தன்னுடன் அடிக்கடி சண்டையிடுவதாகவும், தன்னைத் தனியாக வாழ வற்புறுத்துவதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகத் தனது குடும்பத்தினர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புகார் அளித்ததுடன் நில்லாமல், தனக்கு ஒரு பொருத்தமான வரனைத் தேடுமாறு தனது குடும்பத்தினருக்கு உத்தரவிடுமாறும் அவர் காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது குமுறல்களை வீடியோவாகவும் பதிவு செய்து அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி படேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே 35 வயதான ஷிவாங்கி…
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், காவல்துறை சீருடையைத் தவறாகப் பயன்படுத்திய இளைஞர் ஒருவரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஹாதேய்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு படகு விபத்தில், உயிரிழந்த தாய் மற்றும் மகனின் உடல்கள் ஒன்றையொருவர் இறுக்கமாகக்…
சமூக வலைதளங்களில் 'புனீத் சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் பிரகாஷ் குமார், சாக்கடை நீரில் குளித்து, அதில் உணவை நனைத்து…
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென், தனது குடும்பத்துடன் இருந்தபோது அனுமதியின்றி வீடியோ எடுத்த நபரைக் கடுமையாக…
வாஷிங்டனில் நடைபெற்ற 'ஒயிட் ஹவுஸ் நிருபர்கள் சங்க விருந்து' (White House Correspondents' Dinner) நிகழ்ச்சிக்குச் சற்று முன்னதாக, ரகசிய…