டெல்லி படேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே 35 வயதான ஷிவாங்கி சர்மா என்ற தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தினர், மருத்துவமனையின் அலட்சியத்தால் தங்கள் வீட்டின் மகாராணியை இழந்துவிட்டதாகக் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டுகின்றனர்.
குழந்தை பிறந்த பிறகு ஷிவாங்கிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பலமுறை தகவல் தெரிவித்தும் மருத்துவர்கள் உரிய நேரத்தில் கவனிக்கவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும், அவருக்கு ஒரு தவறான ஊசி போடப்பட்டதாகவும், அதன் பின்னரே அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததாகவும் அவர்கள் பகீர் புகாரை முன்வைக்கின்றனர். தவறான ஊசி போடப்பட்ட சில நிமிடங்களிலேயே ஷிவாங்கியில் உடல் நீல நிறமாக மாறத் தொடங்கியதோடு, அவரது வாயிலிருந்து நுரை தள்ளியதாகவும் கூறப்படுகிறது.
நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, அவரை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற முயன்றபோது, ஆம்புலன்ஸ் வசதி செய்து தருவதில் மருத்துவமனை நிர்வாகம் காலதாமதம் செய்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இறுதியாக மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். மருத்துவமனையின் இந்த அடுக்கடுக்கான மருத்துவ அலட்சியம் குறித்துப் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய…
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நெருக்கடியை இந்தியா…
தென்னிந்திய திரையுலகின் எவர்கிரீன் நாயகி த்ரிஷா, தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களுடன் மிகுந்த நெருக்கத்துடன்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச்…
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தாக்கம் அரசியல் களத்தில் பெரும்…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன்…