தனிமையில் அழைத்த காதலன்… கூடவே தோழியையும் அழைத்துச் சென்ற இளம் பெண்… காட்டுப்பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் திடீரென்று மாயமானார்கள். இது தொடர்பாக உறவினர்கள் உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் 2 பெண்களையும் தேடி வந்தனர். அப்போது காணாமல் போன ஒரு பெண்ணின் காதலனான ஸ்ரீகாந்த் சவுத்ரி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞர் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார். அதாவது ஸ்ரீகாந்த் அதே பகுதியை சேர்ந்த காணாமல் போன பெண்களில் ஒருவரை காதலித்து உள்ளார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்தப் பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இது ஸ்ரீகாந்துக்கு தெரிய வந்ததால் இது குறித்து தனது காதலியிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஸ்ரீகாந்த் பேசுவதற்காக தன்னுடைய காதலியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண்ணும் தன்னுடைய தோழி ஒருவருடன் அந்த காட்டுப்பகுதிக்கு சென்ற நிலையில் காதலி மீது இருந்த கோபத்தில் ஸ்ரீகாந்த் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அப்போது நேரில் பார்த்த மற்றொரு பெண்ணால் தனக்கு பிரச்சனை ஏற்படும் என்று நினைத்த ஸ்ரீகாந்த் அந்த பெண்ணையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் இருவருடைய உடல்களையும் மறைத்து வைத்து எதுவும் நடக்காதது போல வெளியில் சுற்றித் தெரிந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து இரண்டு பெண்களின் உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளி ஸ்ரீகாந்தை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

5 மணத்தியாலங்கள் ago