விஜய் நீண்ட நாளாக வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்பட சூட்டிங் கில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்தப் படப்பிடிப்பின் போது தன்னை ஆவலாக காண வரும் ரசிகர்கள் அனைவருக்கும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூடும் ரசிகர்களை அவர்களை நேரில் சந்திக்க தன்னை ஆவலாக காண வந்த ரசிகர்களிடம் விஜய் தன் அன்பை காட்டுவார். இது எப்பவும் நீண்ட நாட்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. விஜய் ரசிகர்களை பார்ப்பதற்கு நேரம் ஒதுக்குவதெல்லாம் இயல்பான விஷயமே ஆகும்,

#image_title
ஆனால் விஜய் கட்சி ஆரம்பித்ததை அறிக்கையாக வெளியிட்ட பின் விஜய் அவர்களை நேரில் காண கோடான கோடி ரசிகர்கள் பார்ப்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர் அரசியலுக்கு வருவதை சொன்ன பின் அவர் எந்த பொதுவெளிக்கும் வரவில்லை, ரசிகர்களும் அவரை பார்க்காமல் விடமாட்டோம் என்று அவர் திரைப்படம் சூட்டிங் நடக்கும் அனைத்து இடங்களிலும் சுற்றித்திரிந்து அவரைக் காண ஆவலாக இருந்தார்கள்.

#image_title
கடைசியில் ஒரு வழியாக சென்னையில் கோட் படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடத்தை ரசிகர்கள் கண்டறிந்து அந்த இடத்தை சுற்றி வளைத்தார்கள், விஜய் அவர்களும் இதுவரையில் அறிக்கை இட்ட பின் ஒரு பொதுவெளியையும் வராமல் இருந்த நிலையில் தற்போது இந்தா அன்பான கூட்டதை தவிர்க்க முடியாமல், அரசியல் வந்த பின் முதல்முறையாக இப்பொழுது தான் ரசிகர்களை காண வெளியில் வந்த விஜய் அவர்கள், ரசிகர்களும் இந்த ஒரு வார காலமாக இவரை காணத்தான் காத்துக் கொண்டிருந்தார்கள், விஜய் அவர்களை நேரில் கண்ட பின் ரசிகர்கள் அனைவரும் அவர்கள் ஆரவாரத்தை அள்ளி தெளித்தார்கள், தங்கள் ஆதரவையும் தந்தார்கள், இந்த அன்பு அனைத்தையும் விஜய் அவர்கள் பார்த்த பின் அவரும் நெகிழ்ச்சியாகி, வழக்கம் போல் வேன் மேல் ஏறி ரசிகர்கள் அனைவருக்கும் தன் முகத்தை காண்பித்து தன் மனமார்ந்த நன்றியை அன்பையும் தெரிவித்தார்
தோழர்களுடன் தலைவர்????@tvkvijayoffl #TNWelcomesTVKVijay pic.twitter.com/ydetz3o8Gd
— Jeya Suriya (@MSPMovieManiac) February 4, 2024