Connect with us

CINEMA

பீடி சுற்றும் தொழிலாளி மகள் செய்த சாதனை.. விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி.. குவியும் வாழ்த்துக்கள்..!

தென்காசியில் பீடி சுற்றும் தொழிலாளியை மகள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து வருகிறார்கள். தனது 3-வது முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் கனவை நனவாக்கியுள்ளார் ஸ்ரீமதி. இந்திய நாட்டின் மிக உயரிய பணிகளில் ஒன்றாக கருதப்படுவது இந்திய ஆட்சிப் பணி. இதற்கான சிவில் சர்வீஸ் தேர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று, அதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியானது.

   

நாட்டின் லட்சக்கணக்கானோர் இந்த தேர்வினை எழுதினாலும் சில நூறு பேர் மட்டுமே இந்த பணிக்கு தேர்வாகிறார்கள். அந்த அளவுக்கு இந்த தேர்வு மிகவும் கடுமையானதாக இருக்கும். சிவில் சர்வீஸ் என்பது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட நாட்டின் உயரிய பணிகளுக்காக மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வு. 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வானது நடைபெற்று முடிந்த நிலையில் இந்த ஆண்டு 2016 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் ஏராளமானோர் வெற்றி பெற்று மத்திய அரசு பணிகளுக்கு தேர்வாகியுள்ளார்கள். அந்த வகையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரது மகள் ஸ்ரீமதி. இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பீடி சுற்றும் தொழிலாளியான சீனிவாசன் மிகுந்த வறுமையில் தனது மகளைப் படிக்க வைத்தார்.

கணினி படிப்பில் பட்டம் பெற்ற ஸ்ரீமதி கோவை மண்டல பிஎஃப் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கிடைக்கும் நேரங்களில் மத்திய அரசு பணிகளுக்காக தயாராகி வந்த இவர் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று இருக்கின்றார். விரைவில் இவருக்கு பணி ஒதுக்கீடு முடிந்ததும் பணியில் சேர உள்ளார். இந்த செய்தி கேட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top