விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் செஃப் தாமோதரன் உடன் இணைந்து வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக கலந்து கொண்டார்.
இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சி 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்து ஐந்தாவது சீசன் சிறப்பாக தொடங்கியுள்ளது. ஆனால் இதில் ஒரு மாற்றம் என்னவென்றால் வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்கவில்லை. மாறாக மாதம்பட்டி ரங்கராஜன் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார்.
இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராதவிதமாக சன் டிவியில் வெங்கடேஷ் பட் என்ட்ரி கொடுத்தார். சன் டிவியில் டாப் குக் டூப் குக்கு என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதில் வெங்கடேஸ் பட் நடுவராக பங்கேற்க உள்ளார்.
மேலும் ஜிபி முத்து, மோனிஷா, பரத், தீபா உள்ளிட்டோரும் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு வந்து விட்டதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்று டாப் குக் டூப் குக்கு நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது. பின்னி கிருஷ்ணகுமார், சிங்கம்புலி, சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, கயல் சீரியல் சைத்ரா ரெட்டி, வில்லன் நடிகர் தீனா என மொத்தம் 9 போட்டியாளர்கள் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் பங்கேற்பது தெரியவந்தது.
ப்ரோமோவில் வெங்கடேஷ் பட் இங்கு நான் தான் கிங் நான் வெச்சது தான் சட்டம் என பேசுகிறார். வருகிற 19ஆம் தேதி முதல் வாரம்தோறும் பகல் 12 மணிக்கு டாப் குக்கு டூப் குக் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.