பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி தொகுப்பாளராக முதலில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கேற்று l வெற்றி பெற்றார்.
முதன் முதலாக நீதானா அவன் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். பின்னர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு ரம்மி, திருடன் போலீஸ், வடசென்னை என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். தற்போது தீயவர் கொலைகள் நடுங்க, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடை அணிந்து ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.