Connect with us

மணிரத்னத்தை மரத்தடியில் நிக்கவைத்து அவமானப்படுத்திய இளையராஜா…  கடுப்பாகி ஏ ஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்திய பாலச்சந்தர்!

CINEMA

மணிரத்னத்தை மரத்தடியில் நிக்கவைத்து அவமானப்படுத்திய இளையராஜா…  கடுப்பாகி ஏ ஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்திய பாலச்சந்தர்!

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் இசையமைத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டும்.

இளையராஜா  80 களில் உச்சத்தில் இருந்த போது தென்னிந்தியாவின் அனைத்து முன்னணி இயக்குனர்களும் அவரோடு ஒரு படமாவது இணைந்து பணியாற்றியுள்ளார்கள். இளையராஜா அன்னக்கிளி படம் மூலமாக அறிமுகமான ஆண்டு 1976. அப்போது தமிழ் சினிமாவில் புகழோடு இருந்தவர் பாலச்சந்தர். ஆனால் அவர் 1985 ஆம் ஆண்டுதான் இளையராஜாவோடு சிந்து பைரவி படத்தின் மூலம் இணைகிறார். இந்த படம் இளையராஜாவுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ஆனால் இவர்கள் கூட்டணியில் நான்கே ஆண்டுகளில் பிரிந்தது.

பாலச்சந்தர் மீது ஏற்பட்ட கோபம் காரணமாக இளையராஜா, அவர் தயாரிக்கும் படங்களுக்கும் இசையமைக்க மறுத்துள்ளார். அப்படி அவர் இழந்த படங்களில் முக்கியமானது ரஜினியின் அண்ணாமலை மற்றும் மணிரத்னத்தின் ரோஜா ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது.

   

வழக்கமாக மணிரத்னத்தின் படங்களுக்கு எல்லாம் இளையராஜாதான் இசையமைப்பார். அப்போது மணிரத்னம் பாலச்சந்தர் தயாரிக்க இருந்த ரோஜா படத்தின் கதையை சொல்ல இளையராஜா அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.  அவரை உள்ளே விடாத இளையராஜா மரத்தடியிலேயே நீண்ட நேரமாக நிற்கவைத்துள்ளார்.

 

இதைத் தெரிந்து கோபமான பாலச்சந்தர் காரை எடுத்துக் கொண்டு வந்து மணிரத்னத்தை அழைத்துச் சென்றாராம். அவரிடம் “நாம் ஒரு இளைஞனை இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துவோம்” எனக் கூறி சம்மதிக்க வைத்துள்ளார். அப்படி அவர்கள் அறிமுகப்படுத்திய இளைஞர்தான் திலீப் என்று அப்போது அறியப்பட்ட ஏ ஆர் ரஹ்மான்.  இந்த தகவலை சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

இந்த படம் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலேயே ஒரு முக்கியமானப் படமாக அமைந்தது. அந்த படத்துக்குப் பிறகு தான் இளையராஜாவின் மார்க்கெட் குறைய ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுவது உண்டு.

Continue Reading
To Top