சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான அரண்மனை 4 திரைப்படம் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

அதனை ஈடு செய்யும் விதமாக சுந்தர்.சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

இருவரும் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. முதல் நாளிலிருந்து இன்று வரை பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ளது.

இதுவரை வந்த தகவல்களின்படி 9 நாட்களில் அரண்மனை 4 படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இனிவரும் நாட்களில் படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

