அடக்கடவுளே..! வகுப்பறையில் இன்ஜெக்ஷன் சோதனை செய்த ஆசிரியர்.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பகீர் வீடியோ

Spread the love

பீகார் மாநிலம் ஃபோர்பிஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சி.கே. ராஜ் என்ற பயாலஜி (உயிரியல்) ஆசிரியர், வகுப்பறையில் மாணவர்களுக்கு ஊசி போடும் முறையைக் கற்றுக்கொடுக்கத் தனது சொந்த உடலையே பயன்படுத்தியுள்ளார். வழக்கமாக ஏதேனும் மாதிரிகள் அல்லது கரும்பலகை மூலம் விளக்க வேண்டிய செய்முறைப் பயிற்சியை, அவர் தனது கையில் மாணவர்களைக் கொண்டு நேரடியாக ஊசி போட வைத்துப் பாடம் நடத்தியுள்ளார். இந்த விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு மாணவி கையில் ஊசியுடன் பயந்து நடுங்கியபடி நிற்பதும், அந்த ஆசிரியர் அவரை தைரியப்படுத்தி “ஊசியைக் குத்து, குத்து…” என்று பீகாரி மொழியில் கூறுவதும் பதிவாகியுள்ளது. அந்த மாணவி ஊசி போட்டவுடன், மற்றொரு மாணவியை அழைத்து அதை எடுக்கச் சொல்கிறார். மேலும், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் ஊசி சரியாகப் போடப்படவில்லை என்று கூறியதால், பயந்து நடுங்கிய மற்றொரு மாணவனையும் அழைத்து ஆசிரியர் வலுக்கட்டாயமாகத் தன் கையில் மீண்டும் ஊசி போட வைத்துள்ளார்.

https://www.instagram.com/reel/DYdkpsEhr3U/?utm_source=ig_web_copy_link

இந்த வீடியோவை அந்த ஆசிரியரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் (இணையவாசிகள்) பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் ஆசிரியரின் இந்தச் செயலை மிகவும் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என்று விமர்சித்தாலும், பலர் “அடுத்ததாக மாணவர்களுக்கு ஆபரேஷன் செய்யும் பயிற்சியையும் இப்படியே கற்றுக்கொடுத்து விடுங்கள்” என்றும், “மாணவர்களைப் பாஸ் செய்ய வைப்பதற்குள் ஆசிரியர் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் போல” என்றும் நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

வெளிய வாங்கண்ணே நீங்கதான் இப்ப முதல்வர்..! சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா..? தவெக தலைவர் விஜய்யை வறுத்தெடுத்த பிக்பாஸ் ஜூலி…!!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…

10 minutes ago

காட்டுராஜாவை அலறவிட்ட தாய் எருமை..! பிறந்த சில நிமிடங்களிலேயே குட்டியை தூக்க வந்த சிங்கம்..! பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…

17 minutes ago

“கன்னத்தில் அடித்தார்கள்”.. இன்ஸ்பெக்டரின் கொடூர செயல்… மிரண்டு போய் தற்கொலை செய்த 63 வயது முதியவர்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது விவசாயி அந்தோணி ராஜ், தனது வீட்டின்…

22 minutes ago

“ரவி – ஆர்த்தி விஷயத்தில் குஷ்பூ செய்தது இதுதான்.. ரகசிய திருமணம் வேறு நடந்ததாம்.. பிரபலம் சொன்ன அந்த பகீர் தகவல்”..!!

ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து…

32 minutes ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு…. அரசு அவரச ஆலோசனை… இன்று வெளியாகபோகும் அறிவிப்பு…!

வெப்ப அலை மற்றும் கடுமையான கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்து அரசு பரிசீலிப்பது மிகவும் வரவேற்கத்தக்க,…

34 minutes ago

“ட்வீட் போடவா சிஎம் ஆனீங்க?.. எங்க அண்ணன் ஆக்ஷன் ஹீரோன்னு நம்பி ஏமாந்துட்டோம்”.. முதலமைச்சர் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் ஜூலி..!!

கோயம்புத்தூர் பாரதிபுரம் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும்…

42 minutes ago