கோயம்புத்தூர் பாரதிபுரம் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை என சிறுமியின் உறவினர்கள் கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, காலதாமதமாக முதலமைச்சர் விஜய் சிறுமியின் குடும்பத்தினரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். இந்தத் தாமதமான நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, இச்சம்பவம் குறித்து தமிழக அரசை நோக்கித் தனது கடுமையான ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில், “தவெக தான் தற்போது ஆட்சியில் இருக்கிறது, விஜய் அண்ணா தான் சிஎம் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா இல்லையா? கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் மரணச் செய்திகளாகவே வருகின்றன. கோவையில் சிறுமி படுகொலை, கடற்கரைக்குச் சென்ற பெண் மரணம், திருச்சியில் தவறான சிகிச்சையால் செவிலியர் உயிரிழப்பு எனத் தொடர் சோகங்கள் நடக்கின்றன. ஆனால், முதலமைச்சரான நீங்கள் இதற்கெல்லாம் வெறும் ட்வீட் (Tweet) மட்டுமே போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ட்வீட் போடுவதற்காகவா மக்கள் உங்களை ஆட்சியில் அமர வைத்தார்கள்?” என்று ஜூலி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், முதலமைச்சரின் கள செயல்பாடுகள் குறித்து விமர்சித்த ஜூலி, “எங்கள் அண்ணன் ஆக்ஷன் ஹீரோ, ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் மாற்றிவிடுவார் என்று நம்பித்தானே மக்கள் ஓட்டு போட்டார்கள்? ஆனால், இப்போது பாதிக்கப்பட்ட மக்களைக் களத்தில் வந்து சந்திக்கக் கூட உங்களால் முடியவில்லை. மக்களின் கதறல் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா? உங்கள் அமைச்சர்களோ இது அரசியல் என்று கூறி மனசாட்சியே இல்லாமல் பேசுகிறார்கள். பல இடங்களில் மின்சாரக் தட்டுப்பாடு நிலவுகிறது, மக்களை இப்படி கஷ்டப்படுத்தவா முதலமைச்சரானீர்கள்? இன்ஸ்டாகிராமில் தவெக-விற்கு முட்டுக்கொடுத்தவர்கள் இப்போது எங்கே போனார்கள்? ட்விட்டரிலும், வாட்ஸ்அப்பிலும் ஸ்டேட்டஸ் வைக்க எங்களுக்கும் தெரியும், நீங்கள் களத்தில் இறங்கிப் பேசுங்கள் அண்ணா” என்று முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு…
தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்று வெறும் 14 நாட்களே ஆகியுள்ள நிலையில், பிக்பாஸ்…
பிறந்த சில நிமிடங்களிலேயே எருமைக்குட்டி ஒன்று ஆண் சிங்கத்திடம் சிக்கியதும், அதை மீட்க தாய் எருமை உயிரைப் பணையம் வைத்து…
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயது விவசாயி அந்தோணி ராஜ், தனது வீட்டின்…
ஆர்த்தியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி, சில வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து…
வெப்ப அலை மற்றும் கடுமையான கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஒத்திவைப்பது குறித்து அரசு பரிசீலிப்பது மிகவும் வரவேற்கத்தக்க,…