புதுச்சேரி கோவிலில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்..! தேர்தல் வேண்டுதல் நிறைவேறியது.. முதலமைச்சர் விஜய்-க்கு சிலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய தமிழக அமைச்சர்…!!

Spread the love

புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேறினால், அதற்கு நேர்த்திக்கடனாக சிலைகளைச் செய்து வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, குழந்தை வரம் வேண்டிப் பெற்றவர்கள் தங்களது குழந்தைகளின் சிலைகளைச் செய்து இங்கு நேர்த்திக்கடன் செலுத்துவது பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில், தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ்குமார், தற்போது வீட்டு வசதி, நகர்ப்புற திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி, இந்த அழகர் கோவிலில் சிலை வைப்பதாக அமைச்சர் ராஜ்குமார் முன்பு நேர்த்திக்கடன் நேர்ந்துள்ளார்.

தேர்தலில் தவெக வெற்றி பெற்று, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜ்குமார் தென்னம்பாக்கம் கோவிலுக்கு நேரில் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது, தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் விஜய் மற்றும் தனது சொந்த உருவத்திலான சிலைகளை நேர்த்திக்கடனாகக் கோவிலில் வைத்து, அழகு சித்தரை வணங்கி வழிபாடு செய்துள்ளார்.

Swetha

Recent Posts

நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..! பணம் தர மாட்டியா..? கைக்குழந்தையுடன் இருந்த தாயை ஓட ஓட விரட்டிய போதை ஆசாமி..!!

சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் ஒரு வீடியோ தற்பொழுது வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பதிவில், போதைப்பொருள் உட்கொண்டதாகக்…

2 minutes ago

அதிர்ச்சி..! விளையாடும்போது நேர்ந்த கொடூரம்.. தந்தையின் மடியிலேயே 6 வயது சிறுவன் துடிதுடித்து மரணம்..!!

உத்தரப் பிரதேசத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் அஸ்ஜத், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வண்டிக்கு இடையே தலை மற்றும்…

11 minutes ago

வீர வசனம் பேசுனீங்களே என்னாச்சு..? CM ஜோசப் விஜய் வாய்மூடி மௌனம் காப்பது ஏன்..? டிடிவி தினகரன் காட்டம்..!!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக அன்றாடம் அரங்கேறி வரும் குற்றச் சம்பவங்களைக் கண்டு கொள்ளாமல் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாய்மூடி…

16 minutes ago

கல்லூரி மாணவி குளிப்பதைத் எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்… கைது செய்த போலீஸ்..!!

தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதைத் தனது செல்போனில் எட்டிப்பார்த்த தம்புக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சி…

20 minutes ago

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு..? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று…

26 minutes ago

BREAKING: கட்டணம் ரத்து.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!!

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் தற்காலிகக் கட்டண விலக்கு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.…

30 minutes ago