கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையிலேயே தலைமை ஆசிரியையும் மற்றொரு ஆசிரியையும் பரஸ்பரம் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பள்ளியின் தலைமை ஆசிரியை புவனா என்பவர், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை கலைமதி சரியாக வேலை செய்யவில்லை என வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கல்வி அதிகாரி பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைமதி, மாணவர்கள் பாடம் படித்துக்கொண்டிருந்த வகுப்பறைக்குள்ளேயே சென்று தலைமை ஆசிரியை புவனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DbkoGnVAOAH/?utm_source=ig_web_button_share_sheet
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, ஆசிரியை கலைமதி தலைமை ஆசிரியை புவனாவைத் தாக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. வகுப்பறையில் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆசிரியைகள் இருவரும் மோதிக்கொண்ட காட்சி அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2026-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று நிகழவுள்ளது. இந்த முழு சூரிய…
தஞ்சாவூர் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசாத விஷயங்களைத் திரித்து, வீடியோவை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று திமுக…
தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி வீட்டில் தங்கி 10-ஆம்…
தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் தான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு தவறாகப் பேசவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் வரும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் அந்தியோதயா…