ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் திலீப் பிஷோனி என்பவருக்கும் சஞ்சு பிஷோனி என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இந்த சம்பாதிக்கு மூன்று வயதில் ஒரு மகள் உள்ளார். இதனிடையே அரசு பள்ளி ஒன்றில் சஞ்சு ஆசிரியை ஆக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சுவுக்கும் அவருடைய கணவர் திலீப்புக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் உட்பட மாமனார் மாமியார் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்நிலையில் கலந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து சஞ்சு வீட்டுக்கு வந்த நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு மீண்டும் மாமனார் மாமியார் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதனால் விரத்தி அடைந்த அவர் தன்னுடைய மகளுடன் வீட்டில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும் மகள் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த சம்பவத்தில் மூன்று வயது மகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை வீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள்…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாமிற்கு நகரத் தொடங்கியுள்ளனர்.…
தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, திமுகவின் அடிமட்டத் தூண்களாகக் கருதப்படும் ஒன்றியச் செயலாளர்கள்…
மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உடற்கல்வி வகுப்புகளைக்…
மேற்கு வங்க சட்டப்பேரவையைத் தொடர்ந்து, டெல்லி நாடாளுமன்ற லோக்சபாவிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது கடுமையான பிளவைச் சந்தித்து அரசியல்…
லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) பரப்புரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் தாடி பாலாஜி திடீரென விலகியுள்ளார். கடந்த ஆண்டு…