தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது. இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் 1967, 1977 ஆம் ஆண்டு போல் தமிழக தேர்தல் வரலாறு மாறுமென விஜய் பேசி வருவதற்கு பின்னால் மாபெரும் மாஸ்டர் பிளான் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது திமுக மற்றும் அதிமுக கூட்டணி ஆட்சிக்கு பிடி கொடுக்காமல் உள்ளன. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியில் பங்கு என்ற தாரக மந்திரத்தை கையில் எடுத்துள்ளார் விஜய். கூட்டணி ஆட்சி என்ற கருத்தை கூறிவரும் காங்கிரஸ், PMK, DMDK உள்ளிட்ட கட்சிகளை TVK ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…
"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…
கடலூர் குழந்தைகள் நல மையத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு ஊழியர் சமயவேலு என்பவர்…
சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி படப்பிடிப்பு நள்ளிரவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது,…