#image_title
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாதிக்கா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லப்பர் பந்து திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் ஒன்று என பெயர் வாங்கியுள்ளது. இந்த நிலையில் லப்பர் பந்து படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தையும் நீங்கள் தான் இயக்க வேண்டும் என தமிழரசனிடம் கூறியுள்ளார். ஆனால் தமிழரசன் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். அதற்கு காரணம் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அதிக பிரச்சனைகள் வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழரசன் பச்சமுத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அடுத்த படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தில் நடிக்க பிரபல நடிகரான தனுஷ் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்த ஆந்திர முதல்வர்…
மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளுடன் அஸ்வினி…
திரையுலகில் ஒரு நடிகரின் சந்தை மதிப்பைத் தீர்மானிப்பதில் அவர் வாங்கும் சம்பளம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நடிகர் விஜய் தனது…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது மகளின் காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை…
ஈரானின் அணுசக்தி நிலையங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில்…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…