#image_title
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் பேரன் தான் உதயநிதி ஸ்டாலின். இவரது தந்தை மு க ஸ்டாலின் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகுத்து வருகிறார். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று இருக்கிறார். அரசியல் பணிகளுக்கு வருவதற்கு முன்பு சினிமாவில் சில காலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியதன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் உதயநிதி ஸ்டாலின்.
ஒரு கல் ஒரு கண்ணாடி, பொதுவாக எம்மனசு தங்கம், நிமிர், மாமன்னன், இது கதிர்வேலன் காதல் ஆகிய திரைப்படங்கள் உதயநிதி ஸ்டாலின் நடித்ததில் குறிப்பிடத் தகுந்தவை ஆகும். பொதுவாக உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைதியான நபர் என்று தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் சில இடங்களில் அவர் நடிகர்களை மேடை நிகழ்ச்சிகளில் கலாய்த்து வச்சு செஞ்சிருப்பார். அதை நாம் கவனத்திற்க மாட்டோம். அப்படி யாரையெல்லாம் இவர் கலாய்த்து இருக்கிறார் என்று பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் வெளிவந்திருந்தது. டான் திரைப்படத்தில் ஒரே ஒரு இடத்தில் தான் சூரி வருவது காமெடியாக பார்க்கப்பட்டது. அதுவும் பலருக்கு சிரிப்பே வரவில்லை என்று கூறியிருந்தனர். அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் அந்த காட்சியை பார்த்துவிட்டு என்னடா இது காமெடி வச்சிருக்காங்க சிரிப்பே வரல அப்படின்னு சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாம டான் படத்தின் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அவர்களை பார்த்து நல்ல வேளை இந்த படத்துல நான் நடிக்கல அப்படின்னு சொல்லி கலாய்ச்சிருப்பார். அதற்குப் பிறகு இல்ல அந்த ஸ்கூல் போஷன் எல்லாம் என்னால நடிச்சிருக்க முடியாது அப்படின்னு சொல்லி சமாளித்து இருப்பார்.
அடுத்ததாக ஆர்யா நடித்து வெளியான திரைப்படம் கேப்டன். ஆர்யா இந்த படம் வெளியான பிறகு உதயநிதிக்கு போன் பண்ணி இந்த படம் பாருங்க ரொம்ப நல்லா இருக்கும் பிரம்மாண்டமா வந்திருக்கு அப்படி இப்படின்னு சொல்லி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினும் மாரி செல்வராஜ் உடன் போய் படம் பார்க்க போயிருக்கார் படம் முடிஞ்சு வெளியே வந்ததும் மாரி செல்வராஜ் என்னங்க இப்படி எல்லாம் படம் எடுத்து வச்சிருக்காங்க அப்படின்னு சொல்லி இருக்கிறார். பிறகு கொஞ்ச நாள் கழிச்சு ஆர்யாவ பார்க்கும்போது என்னடா படம் எடுத்து வச்சிருக்கீங்க உங்களுக்கே இது நியாயமா இருக்காடா ஏலியெல்லாம் பாவம்டா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க அப்படின்னு கலாய்ச்சிருக்கிறார்.
அடுத்ததாக விஷால் நடித்த லத்தி படம் வெளியானது. அந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் விஷாலை பார்த்து முதலில் கமிஷனரா நடித்தார் அசிஸ்டன்ட் கமிஷனரா நடித்தார் பிரமோஷன் வாங்கி கான்ஸ்டபிளா நடித்திருக்கிறார். அது மட்டும் இல்ல நடிகர் சங்க கட்டடத்தை சீக்கிரமா கட்டி முடிங்க அது கட்டி முடிஞ்சா தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லி இவன் ஊரை ஏமாத்திட்டு இருக்கான் அப்படின்னு சொல்லி கலாய்ச்சி இருக்கார். இப்படி பல நடிகர்களை இவர்களெல்லாம் நண்பர்கள் என்பதால் பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவரின் இன்னொரு பக்கம் இவ்வளவு ஒரு ஜாலியான மனிதராக இருப்பார் உதயநிதி ஸ்டாலின் என்பது பலருக்கும் தெரியாது.
இந்த வீடியோவில் நீங்கள் விவரிக்கும் காட்சிகள் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது, அவர்…
சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர் நெஞ்சங்களை பதற வைக்கிறது. ஒரு பெண் தனது கணவர்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…