1935ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சேலத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டிஆர்எஸ்) துவக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தான் மாடர்ன் தியேட்டர். தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இதுவே. சென்னை போன்ற பெரிய நகரங்களை விட்டு முதன் முதலாக சேலம் போன்ற வெளி நகரம் ஒன்றில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டது . 50 மற்றும் 60 காலகட்டத்தில் மாடர்ன் தியேட்டர் நிறுவனம் மிக பிரபலமான நிறுவனமாக இருந்தது. அந்த நிறுவனத்தில் பல நடிகர் நடிகைகள் ஒரு காலகட்டத்திலேயே மாத சம்பளத்திற்கு வேலை செய்ததைப் போல பல பின்னணி பாடகர்களும் மாத சம்பளத்திற்கு அங்கு பணியாற்றினர்.
அப்படி பணியாற்றிக் கொண்டிருந்த கலைஞர்களில் மிக முக்கியமான கலைஞர்கள் என்றால் டி எம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ் சி கிருஷ்ணன் ஆகியோரை சொல்லலாம். பொதுவாகவே பாடல்களில் என்றால் கழுத்தளவு தண்ணீரில் நின்று சாதகம் செய்தால் குரல் நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை உடையவர்கள். அப்படி சாதகம் செய்வதற்கு மாடர்ன் தியேட்டரில் வசதி இல்லை.
அதனால் மாடர்ன் தியேட்டரில் நிறுவனர் டி ஆர் சுந்தரம் அவர்களை சந்தித்து சந்தித்து அவர்கள் அனைவரும் நாங்கள் சாதகம் செய்வதற்கு தண்ணீர் வேண்டும் என்று கூறியுள்ளனர். உடனே டி ஆர் சுந்தரம் உங்களுக்கு என்ன வேண்டும் தெளிவாக கூறுங்கள் என்று கேட்க நாங்கள் காலையில் சாதகம் செய்வதற்கு தண்ணீர் தொட்டி ஒன்று கட்டிக் கொடுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு எதுவும் மறு பேச்சு பேசாத டி.ஆர் சுந்தரம் உடனே தண்ணீர் தொட்டியை கட்டிக் கொடுத்தார்.
பிறகு அந்த தொட்டியில் அமர்ந்து தான் பாடகர்கள் அனைவரும் சாதகம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கழுத்தளவு தண்ணீரில் அமர்ந்து தான் சாதகம் செய்ய வேண்டும் என்றால் வேறு எங்கையாவது செல்லுங்கள் என்று டி ஆர் சுந்தரம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் பாடகர்களின் கோரிக்கையை ஏற்று அவர் உடனே அவ்வாறு செய்தது பாராட்டுக்குரியது என்று பல பின்னணி பாடகர்கள் அவரை பலமுறை நன்றி கூறி பெருமைப்படுத்தியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…
பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…
செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…