Connect with us

CINEMA

அந்த விஷயம் செட் ஆகல.. தென்னிந்திய சினிமாவில் இருந்து விலகியதற்கு தமன்னா கூறிய காரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

முன்னணி நடிகையான தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தி திரைப்படமான சந்த் சா ரோஷன் செஹ்ரா மூலம் தமன்னா தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். தமிழ் சினிமாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமன்னா அறிமுகமானார்.

   

இதனையடுத்து ஹேப்பி டேஸ் மற்றும் கல்லூரி படங்களில் நடித்து திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்றார். தமிழில் முன்னணி நடிகர்களுடன் அயன், சிறுத்தை, வீரம், தர்மதுரை, தேவி, ஸ்கெட்ச், சுறா உள்ளிட்ட படங்களில் நடித்து தமன்னா புகழ்பெற்றார். ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்த காவலா பாடல் மெகா ஹிட் ஆனது. தற்போது தமன்னா ஹிந்தி வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

தென்னிந்திய படங்களிலிருந்து விலகி இருக்கும் தமன்னா கூறியதாவது, தென்னிந்திய சினிமாவில் சில பார்முலாக்கள் இருக்கிறது. அவை எளிதானவை. சில கமர்சியல் படங்களில் எனது கதாபாத்திரங்களுடன் என்னால் பொருந்த முடியவில்லை. இயக்குனர்களிடம் அதை குறைக்கும்படி கேட்டேன். சகிக்க முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தை கொண்டாடும் படங்களில் நடிக்காமல் இருக்க முயற்சி செய்ய தொடங்கினேன்.

தென்னிந்திய சினிமாவில் எனக்கு கிடைத்த வெற்றி ஹிந்தியில் எனக்கு கிடைக்கவில்லை என கேட்கிறார்கள். ஒரு படம் பலரின் பங்களிப்புடன் உருவாவதால் அதை நான் தனிப்பட்ட தோல்வியாக எடுத்துக் கொள்வதில்லை. அந்த வகையில் எனது வெற்றி தோல்வி இரண்டிலும் இருந்து விலகி இருக்கிறேன். சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆனது. ஒவ்வொரு நாளும் கேமராவை எதிர்கொள்ளும் ஆசையுடன் எழுதுகிறேன். நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது என தமன்னா கூறினார்.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top