Connect with us

CINEMA

42 வயதிலே இறந்துபோன காமெடி நடிகர் சுருளிராஜன்.. இந்த வினோத பழக்கம் தான் காரணமா..? பயில்வான் சொன்ன தகவல்..

நடிகர் சுருளிராஜன், தமிழ் சினிமாவில் 1970, 80்களில் நிறைய படங்களில் நடித்திருப்பார். மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் இவரது கஞ்சத்தனம் கேரக்டர் வெகுகாலம் ரசிகர்களால் சிலாகித்து ரசித்து பேசப்பட்டது. மகா கஞ்சனாக அவர் அதில் நடித்திருப்பார். ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில், வில்லன் ஜெய்சங்கரின் கணக்குப்பிள்ளையாக நடித்திருப்பார். இவர் பேசும் மொழி ரசிக்கும்படியாக இருக்கும். மிமிக்ரி கலைஞர்கள் இவரது குரலில் நிச்சயம் பேசுவார்கள். நிறைய வெற்றி படங்களில் சுருளிராஜன் நடித்தவர். மிக குறுகிய காலத்தில், தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர்.

 Actor Surulirajan

   

இதுகுறித்து நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, சுருளிராஜன், நீண்ட காலம் இருந்த நிறைய படங்களில் நடித்து பேரும் புகழும் அடைய வேண்டியவர், ஆனால், இளம் வயதில் அதாவது 42 வயதிலேயே சுருளிராஜன் இறந்து போனார். அதற்கு முக்கிய காரணம், அவரது மதுப்பழக்கம். பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அவரது கால்ஷீட் வேண்டும் என்றால், வெளிநாட்டு மதுபானம் வாங்கிக் கொடுத்தால், உடனே நடிக்க ஒத்துக்கொள்வார். ஆனால் அவருக்கு சுகர் இருந்தது. இந்நிலையில் ஒரு நடிகர், மதுபானத்தில் இளநீர் கலந்து குடித்தால் கசப்பு தெரியாது என்று சொல்ல, இளநீர் சுகர் இருக்கிறதே என சுருளிராஜன் மறுத்திருக்கிறார். இளநீரில் சுகர் கிடையாது, தாராளமாக குடியுங்கள் என அந்த நடிகர் சொன்னதை கேட்டு, இவர் மதுவில் இளநீரில் கலந்து கலந்து குடித்திருக்கிறார்.

 Actor Surulirajan

ஒரு கட்டத்தில் உடல்நிலை மிகவும் மோசமாகி போனது. இவருக்கு, வெளிநாட்டில் இருந்து மருந்துகளை வரவழைத்து தந்திருக்கிறார் மக்கள் திலகம் எம்ஜிஆர். ஆனாலும், சில மாதங்களில் அவர் மிகவும் கவலைக்கிடமாகி இறந்துவிட்டார். மிக விரைவில் சினிமா புகழில் உச்சிக்குச் சென்று பின் அதே வேகத்தில் இறந்து போனார் சுருளிராஜன் என்று ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top