Connect with us

CINEMA

மௌன குரு, மகாமுனி என 2 தரமான படங்கள்.. இயக்கர் சாந்த குமாரின் “ரசவாதி” எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..

இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரசவாதி. இந்த திரைப்படம் குறித்த விமர்சனம் வெளியாகி இருக்கின்றது. தமிழில் மௌனகுரு, மகாமுனி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சாந்தகுமார். இவரின் இயக்கத்தில் கிரைம், ரொமாண்டிக் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ரசவாதி.

   

இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் ரம்யா சுப்ரமணியன், ஜி எம் சுந்தர், ரேஷ்மா வெங்கட், சுஜாதா உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றார். இப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. கொடைக்கானலில் சித்தா டாக்டராக பணியாற்றி வருபவராக நடித்திருக்கின்றார் அர்ஜுன் தாஸ்.

அங்கு ஹோட்டலில் மேனேஜராக சூர்யா என்ற கதாபாத்திரத்தில் தனியா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் கடந்த கால வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. அதற்கான பிளாஷ்பேக் காட்சிகள் இரண்டாம் பாதியில் வெளியானது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்குகின்றனர். அங்கு இன்ஸ்பெக்டராக பரசுராஜ் கதாபாத்திரத்தில் சுஜித் சங்கர் என்ட்ரி கொடுக்கிறார்.

அவரும் நடிகையான தன்யாவை காதலிக்க இன்ஸ்பெக்டருக்கும் ஹீரோவுக்கும் இடையே மிகப்பெரிய சண்டை நடக்கின்றது. அதுமட்டுமில்லாமல் தன்யா ரவிச்சந்திரன் ஹீரோ அர்ஜுன் தாஸை காதலிப்பதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கின்றது. கடைசியில் ஹீரோ ஹீரோயின் இணைந்தார்களா? என்பது தான் இப்படத்தின் கதை. இதனை திரில்லர் கலந்து கலவையாக கொடுத்திருக்கின்றார் இயக்குனர் சாந்தகுமார்.

இந்த படத்திற்கு பிளஸ் பாயிண்ட் அர்ஜுன் தாஸ்தான். சிரமம் இல்லாமல் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். பொறுமை இருந்தால் இந்த திரைப்படத்தை பார்க்க முடியும். வேகத்தை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஆனாலும் நல்ல அழுத்தமான கதையை கொடுத்திருக்கின்றார் இயக்குனர் சாந்தகுமார். இந்த திரைப்படத்தை ஒரு முறை பார்க்கலாம் என படம் பார்த்த பலரும் கூறி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top