Connect with us

CINEMA

அன்பே சிவம் படத்தால தான் என் பொண்ணுக்கு ஸ்கூல் சீட்டே கிடைச்சது.. அப்ப கமல் சார் சொன்னது ஞாபகம் வந்துச்சு.. சுந்தர் சி ஓபன் டாக்..!

அன்பே சிவம் திரைப்படத்தின் மூலமாக சென்னையில் இருக்கும் மிகப்பெரிய பள்ளி ஒன்றில் தங்கள் மகளுக்கு சீட் கிடைத்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கி அவரே ஹீரோவாக நடித்து கடந்த மே மூன்றாம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4. இப்படம் திரையரங்குகளில் வெளியாகிய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சுந்தர் சி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கின்றார். அதை தொடர்ந்து நடிகை ராசி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேலும் ஹிப்பாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தது. அதிலும் ஹாரர் சவுண்ட் அனைத்தும் இப்படத்திற்கு பிளஸ்-ஆக அமைந்தது.

   

கடைசியாக நடிகை குஷ்பு மற்றும் சிம்ரன் இணைந்து சாமி பாட்டு ஒன்றுக்கு நடனமாடி இருந்தார்கள். தொடர்ந்து ஏழு நாட்களில் இந்த திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 40 கோடி வரை வசூல் செய்து இருக்கின்றது. இந்த படத்தின் ப்ரோமோஷன்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் சுந்தர் சி பல பேட்டிகளில் கலந்துகொண்டு சினிமாவில் தனக்கு இருந்த அனுபவத்தை பேசியிருந்தார்.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்பே சிவம். இதில் கமலஹாசன் மாதவன் கிரண் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் தனக்கு என்றுமே நன்மையை தான் செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது “அன்பே சிவம் படம் பண்ணி முடித்தவுடன் கமல் சார் என்னிடம் கூறினார். நாம் ஒரு நல்ல விஷயத்தை செய்திருக்கிறோம். அதனால் இந்த படத்தால் நமக்கு எப்போதும் நல்லது தான் நடக்கும் என்று கூறினார்.

படம் ரிலீஸ் ஆனவுடன் பெரிய அளவு ஹிட் கொடுக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. இப்ப கூட யாராவது அன்பை சிவம் படம் நல்ல படம் என்று சொன்னால் சின்ன வருத்தம் எனக்குள் இருக்கும். அப்போது கமல் சார் சொன்னதுதான் நினைவுக்கு வரும் என்று கூறினார். இப்படத்தால் எனக்கு சில நன்மைகளும் நடந்துள்ளது. இந்த நிமிஷம் வரை நடந்துகிட்டு தான் இருக்கு. அன்பே சிவம் வெளியாகி ஓராண்டு ஆகிய பின் என் மகளுக்கு ஸ்கூல்ஸ் சீட் கேட்க ஒரு பெரிய பள்ளிக்கு சென்றேன்.

அங்கு அட்மிஷனுக்கு போனதும் என்னை பார்த்து சிரித்தார்கள். ஜூன் மாதம் ஸ்கூல் திறக்க போது மே மாதம் வருகிறீர்கள். அட்மிஷன் அனைத்தும் முடிந்து விட்டது. நீங்கள் வேண்டுமென்றால் அடுத்த வருடம் ட்ரை பண்ணி பாருங்க என்று சொன்னார்கள். சினிமா செலிபிரிட்டி என்பதால் தன்னை பிரின்சிபாலில் போய் பாருங்கள் என்று கூறினார். எனக்கு போவதற்கு மனசே இல்ல, அதுதான் சீட் இல்லைன்னு சொல்லிட்டாங்க இல்ல நான் வரமாட்டேன் போனு சொன்னேன்.

குஷ்பூ தான் இந்த வற்புறுத்தி உள்ளே அழைத்து சென்றார் .பிரின்சிபல் ஒரு நார்த் இந்தியன். சினிமா பத்தி ஏதோ பேசுவோம்னு பேச ஆரம்பிச்சாங்க. அப்ப சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன் அருமையா இருந்துச்சு, அந்த படம் பேரு அன்பே சிவம் அப்படின்னு சொன்னாங்க. உடனே என் மனைவி குஷியாகி மேடம் இவர்தான் அந்த படத்தோட டைரக்டர் என்று சொன்னதும் ஷாக் ஆயிட்டாங்க. நீங்க தான் அந்த படத்தோட இயக்குனரா? உங்களுக்கு சீட் கொடுக்காமல் எப்படி என்று உடனே என் மகளுக்கு சீட் கொடுத்துட்டாங்க. அப்பதான் கமல் சார் சொன்னது எனக்கு நினைவுக்கு வந்துச்சு” என்று அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார் சுந்தர் சி.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top