நடிகர் சிம்பு கமலஹாசன் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு.
இடையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் மாநாடு என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கின்றார். தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் இவர் கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தில் அவர் நடிப்பது தொடர்பான என்ட்ரி டீசர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்திருக்கின்றார். நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இப்படம் வெற்றி பெற்றதும் அடுத்ததாக வேல்ஸ் தயாரிக்க இருந்த கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்புவின் நடிக்க ஒப்பந்தம் போட்டிருந்தார்கள்.
ஆனால் இப்படம் அறிவித்து பல ஆண்டுகளான நிலையில் அப்படம் குறித்து எந்த அப்டேட்டும் வரவில்லை, படம் கைவிடப்பட்டது என்று கூறப்பட்டு வந்தது. தற்போது ஐசரி கணேஷ் திடீரென புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொடுத்திருந்த புகாரில் தெரிவித்திருந்ததாவது “கொரோனா குமார் படத்தை முடிக்காமல் சிம்பு வேறு திரைப்படத்தில் நடிக்க கூடாது.
அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. எப்படி சிம்பு தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்கலாம் தனக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்த கொரோனா குமார் படத்தில் நடித்து கொடுத்த பிறகுதான் வேறு திரைப்படத்தில் சிம்பு நடிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். இதற்கு சிம்பு என்ன பதிலளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.