Connect with us

CINEMA

தேடி வந்த ஹாலிவுட் பட வாய்ப்பு.. வெற்றி மாறன் பதிலுக்காக காத்திருக்கும் சூர்யா?.. இப்படி மாட்டிக்கிட்டாரே..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்தப் படத்தில் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது. அதன் பிறகு தன்னுடைய 43வது திரைப்படமான சுதா கொங்கரா இயக்கும் சூரியன் 43 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ள நிலையில் சூரியா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ள வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்கும் என அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

   

சமீபத்தில் வெளியான தகவலின் படி வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் சூர்யாவுக்கு ஆங்கிலத் திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ள நிலையில் அந்த படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் கண்டிஷன் ஒன்று போட்டதால் சூர்யாவுக்கு சிக்கலான நிலை அமைந்துள்ளது. அதாவது சூர்யா அந்த ஆங்கில படத்தில் நடித்தால் வேறு எந்த படத்திலும் தேதியை கொடுக்கக் கூடாது முழுக்க முழுக்க தங்களுடைய படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு தான் அடுத்த படங்களுக்கு கால் சூட் கொடுக்க வேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளனர்.

இதனால் சூர்யா உடனடியாக வெற்றிமாறனை அழைத்து வாடிவாசல் திரைப்படத்தை விரைவாக தொடங்க வேண்டும் எனவும் அதனை முடித்துவிட்டு எனக்கு ஒரு ஆங்கில படம் வந்துவிட்டது என கூறியுள்ளார். ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தில் பிசியாக இருக்க அடுத்த ஆண்டு 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு அதன் பிறகு பார்த்துக் கொள்வோம் என கூறியுள்ளார். அந்த பத்து நாட்களும் வெற்றிமாறன் முழுக்க முழுக்க அமீர் மற்றும் சூரியா காட்சியை தான் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் வெற்றி மாறன் சரியாக ஒரு தேதியை சொல்லாததால் சூர்யா வெற்றிமாறன் பதிலுக்காக காத்திருக்கின்றார்.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top