தமிழ் சினிமாவை பொருத்தவரையில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம் தான். இதனை ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டமாக கொண்டாடுவார்கள். அதன்படி வருகின்ற பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளி போவதாக லைகா நிறுவனம் நேற்று அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அஜித் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகிய நிலையில் தற்போது சூப்பர் ஹீரோக்களின் படங்கள் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளன. அந்தப் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காதலிக்க நேரமில்லை:
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து என்னை இழுக்குதடி என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்தது.
வணங்கான்:
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வணங்கான். இந்த திரைப்படத்தில் முதலில் சூர்யா நடிக்க கமிட்டாகி இருந்த நிலையில் அதன் பிறகு சில காரணங்களால் அவர் விலகியதால் தற்போது அருண் விஜய் இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
தருணம்:
புகழ் மற்றும் ஈடன் தயாரித்து வரும் திரைப்படம் தான் தருணம். தேஜாவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
TEN HOURS
சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள TEN HOURS என்ற திரில்லர் திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…