Connect with us

CINEMA

‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ‘சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்கும் சன் டிவியின் பிரபல சீரியல் நடிகை… TRPக்காக லாக் செய்த விஜய் டிவி…

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகி நிறைவு பெற்ற சூப்பர் ஹிட் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் முடிந்ததை தொடர்ந்து தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஆக்டோபர் 31 ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.  ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் பாகத்தில் அண்ணன் மற்றும் தம்பி பாசத்தை அடிப்படையாக வைத்து வெளியானது.

   

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்பா – மகன்கள் பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் -ல்  மூத்த அண்ணனாக நடித்த மூர்த்தி அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க,  அவரது மனைவியாக நடிகை நிரோஷா நடிக்கிறார். இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் மகள்கள்  உள்ளனர். இவ்வாறு கலகலப்பான தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனாலும் இந்த தொடரின் டிஆர்பியை தக்க வைப்பதற்காக மூர்த்தியை தவிர பல பிரபலங்களை விஜய் டிவி களமிறக்கி வருகிறது. அவர்களில் ஒருவர் தான் நடிகை ஹேமா. பாண்டியன் ஸ்டோர்ஸ்-ல் மீனா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஹேமா தற்பொழுதும் அதே மீனா கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 -ல் களமிறங்கியுள்ளார்.

தற்பொழுது அவரைப்போலவே இந்த சீரியலில் ‘வடிவு’ என்ற கேரக்டரில் சன் டிவியின் பிரபல சீரியல் நடிகையான நடிகை காயத்ரி பிரியா நடித்து வருகிறார். இவர் ஆடுகிறான் கண்ணன், தீர்க்கசுமங்கலி, செல்லமடி நீ எனக்கு, கல்யாண பரிசு செல்லமடி பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ அவரே வெளியிட்ட வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top