சாதாரணமாக ஒரு பொருளைத் திருடுபவர்கள் மறைத்து வைக்கக்கூடிய அளவில் சிறிய பொருட்களை மட்டும் தான் திருடுவார்கள். ஆனால் தற்போதயெல்லாம் பெரிய பொருட்களை திருடி செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் மிகப்பெரிய யானையை ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த நரேந்திர குமார் என்பவர் ஜார்கண்ட் மாநிலம் ராசியிலிருந்து ஜெயமதி என்ற பெண் யானையை 40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அங்குள்ள பகுதியில் யானையுடன் அவர் தங்கி இருந்தார்.
இந்நிலையில் அந்த யானை திடீரென்று மாயமானது. இது தொடர்பாக உடனே அவர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து யானையைத் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து பீகார் மாநிலம் சப்ராவில் ஒரு கும்பல் பெண் யானை ஒன்றை 27 லட்சத்திற்கு விற்றதாக ஜார்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த யானையை மீட்டனர். அதேநேரம் யானையை திருடிவிட்ட கும்பலை போல போலீசார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று எழுதப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்,…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அதிரடி நடவடிக்கைகளைத்…
பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தனது அரசியல் ஆதாயத்திற்காகத் தனது கூட்டணிக் கட்சியான…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய், தனது முதல் கோப்பிலேயே அதிரடி மற்றும் விவாதங்களுக்கு இடமளிக்கும்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் இணைந்து…
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் மாநிலத்தின் நிதி நிலை…