கொளத்தூர் தொகுதியில் 2026 சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்பாராத தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 1989-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடங்கி, 2011 முதல் கொளத்தூரில் தொடர் வெற்றிகளைக் குவித்து அத்தொகுதியைத் தனது கோட்டையாக மாற்றிய ஸ்டாலின், இம்முறை தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தத் தோல்விக்குப் பின் நேரடியாக மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 14 குறிப்பிட்ட பூத்துகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மையைச் சரிபார்க்க விண்ணப்பித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு பூத்துக்கும் ரூ.47,000 வீதம் மொத்தம் ரூ.6.58 லட்சத்தை கட்டணமாகச் செலுத்தியதைத் தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை இன்று காலை 9 மணிக்கு மறு ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று நடைபெறும் இந்தச் சரிபார்ப்பு பணியின் போது, தேர்தலில் பதிவான வாக்குகளின் விவரங்கள் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் மீண்டும் சரிபார்க்கப்பட உள்ளன. மேலும், இந்த இயந்திரங்களின் செயல்பாட்டைச் சோதிக்கும் வகையில் மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட இருக்கிறது; இதற்காக இயந்திரங்கள் ‘ஃபார்மட்’ செய்யப்பட்டு, அதில் வாக்களித்துச் சோதிக்க திமுகவினருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்த மறு ஆய்வின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏதேனும் குளறுபடிகளோ அல்லது தொழில்நுட்பக் குறைபாடுகளோ கண்டறியப்பட்டால், அத்தொகுதியில் மறு தேர்தல் நடத்தக் கோரி நீதிமன்றத்தை நாட திமுக தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர் நலத்திட்டங்களைச் செயல்படுத்திய சொந்தத் தொகுதியிலேயே ஸ்டாலின் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருக்கும் திமுகவினருக்கு, இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மறு ஆய்வு நடவடிக்கை புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நாராயணபேட்டை மாவட்டத்தில் உள்ள எக்னாஸ்பூர் அரசுப் பள்ளியில் பெரும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்குள்ள வகுப்பறை…
வீதியின் ஓரத்தில் சுயநினைவற்று கிடக்கும் தன் தாயை எழுப்பத் துடிக்கும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அழுகை, காண்போர் நெஞ்சை உலுக்குவதாக…
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் ரசூல்பாத் பகுதியில் உள்ள நேரு நகரில், தனது வீட்டின் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் அருகே உள்ள பறையம்பாலம் பகுதியில் வியாழக்கிழமை மதியம் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து…
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் தண்டூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பிரபலமான நகைக்கடையில் 5 பேர் கொண்ட கும்பல்…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பிசிஏ முதலாண்டு படித்து வந்த ஸ்மிருதி பாண்டே என்ற 17 வயது கல்லூரி மாணவி, தனது…