முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோருடன் கர்நாடக மாநிலம் கூர்க் பகுதிக்கு ஒருவாரப் பயணமாகச் சென்று சென்னை திரும்பியுள்ளார். அவர்களுக்கு அடுத்த நாள் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவும் அவர்களுடன் இணைந்துகொண்டார். இவர்கள் எதற்காக கூர்க் சென்றார்கள் என்று மாநில உளவுத்துறையால் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், மத்திய உளவுத்துறையினர் இதுகுறித்த பல ரகசியத் தகவல்களைச் சேகரித்துள்ளனர். கூர்க் பகுதியில் திமுக அறக்கட்டளைக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸில்தான் ஸ்டாலின் தங்கியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், “தேர்தலுக்காக ஒவ்வொரு அமைச்சரிடமும் குறிப்பிட்டத் தொகை கொடுத்திருந்தும் இந்தத் தோல்வி எப்படி ஏற்பட்டது?” என்று ஸ்டாலின் தனது ஆலோசனையைத் தொடங்கியுள்ளார். அதற்குப் பதில் அளித்த மருமகன் சபரீசன், “ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நம்மை ஏமாற்றியது ஒருபுறம் இருந்தாலும், அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் (மா.செ.) நம்மை ஏமாற்றியதைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை” என்று தனது மன ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய உதயநிதி, “அமைச்சர்கள் பலரும் தங்களது சொந்தத் தொகுதியில் தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் அக்கறை காட்டினார்களே தவிர, தங்களுக்குப் பொறுப்பு கொடுக்கப்பட்ட தொகுதிகளில் கட்சியை ஜெயிக்க வைக்க முயற்சிக்கவில்லை” என்று கோபத்தோடு கூறியுள்ளார். மேலும், மற்றவர்கள் ஜெயித்தால் நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்ற சுயநல அரசியல் காரணமாக, தேர்தல் பணிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பெரும் தொகையைச் சரியாகச் செலவு செய்யாமல் சுருட்டிக்கொண்டனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இறுதியாக, பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் யார் யாருக்கு எவ்வளவு தேர்தல் நிதி கொடுக்கப்பட்டது என்ற விவரங்களை ஸ்டாலின் கேட்டுள்ளார். அவர் சொன்ன மிகக் கனமான தொகைகளின் விவரங்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்டாலின், பணத்தைச் சரியாகச் செலவு செய்யாமல் ஏமாற்றியதாக யார் யார் மீதெல்லாம் சந்தேகம் இருந்ததோ, அந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு கடுமையாக வறுத்தெடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…