விஜய் கொடுத்த ‘அந்த ஒரு ‘ நம்பிக்கை… பாஜகவுக்கு ‘குட்பை’ சொல்லும் அண்ணாமலை..? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

Spread the love

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், அமைப்பு செயலாளர் சந்தோஷ் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்த அண்ணாமலை, தனக்கென்று தனிப்பாதையை உருவாக்க விரும்புவதாகவும், தனக்கு வழங்கப்பட்ட மாநிலத் தலைவர் பதவிக்கு நன்றி என்றும் கூறி விடைபெற அனுமதி கோரியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அண்ணாமலை எடுத்துள்ள இந்த முடிவு டெல்லி மேலிடத்திற்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் ‘என் மண்.. என் மக்கள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் தீவிரப் பயணம் மேற்கொண்டு பாஜகவை வளர்ப்பதில் அண்ணாமலை முக்கியப் பங்காற்றினார். இருப்பினும், கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டாத அண்ணாமலையைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கிய பாஜக மேலிடம், அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரனை அந்தப் பொறுப்பில் அமர்த்தியது. தனது உழைப்பிற்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததாலும், மேலிடத்தின் இந்தத் திடீர் நடவடிக்கையாலும் கடும் விரக்தியடைந்த அண்ணாமலை, தற்போது பாஜகவை விட்டு வெளியேறி சொந்தமாகப் புதிய கட்சி தொடங்கும் முடிவில் தீவிரமாக உள்ளார்.

அண்ணாமலையின் இந்தத் திடீர் அரசியல் மாற்றத்திற்குப் பின்னணியில், தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜய் கொடுத்த மிகப்பெரிய நம்பிக்கைதான் காரணமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து வந்தன. ஒருகாலத்தில் பலமாக இருந்த காங்கிரஸ் கட்சியால் கூட மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழ்நிலை நிலவியது. ஆனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தவெக மூலம் 60 ஆண்டுகாலத் தமிழக திராவிட அரசியல் வரலாற்றையே மாற்றி அமைத்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

விஜய்யின் இந்த அசாத்திய அரசியல் வெற்றிதான், அண்ணாமலைக்குத் தனியாகக் களம் இறங்குவதற்கான பெரும் ஊக்கத்தையும் தைரியத்தையும் கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய பாதையைத் தமிழ்நாட்டில் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில், அண்ணாமலை பாஜகவிற்கு ‘குட்பை’ சொல்லிவிட்டுத் தனி கட்சித் தொடங்கும் முடிவை எடுத்துள்ளார். தற்போது பாஜக மேலிடத் தலைவர்கள் அண்ணாமலையைச் சமாதானம் செய்ய தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வரும் வேளையில், அண்ணாமலை தன் முடிவில் மிகவும் உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

5 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

5 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

6 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

6 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

6 மணத்தியாலங்கள் ago