சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி, 14 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நாளடைவில் சரவணன் குடும்பச் செலவிற்குப் பணம் தராமல், நாட்கணக்கில் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சித்ரா கண்காணித்தபோது, சரவணனுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கணவரின் கள்ளத்தொடர்பு குறித்து சித்ரா கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரவணனை பிரிந்து வாழ முடிவு செய்த சித்ரா, குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு அருகே வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இருப்பினும் சரவணன், சித்ராவின் வீட்டிற்கும் அவர் வேலை செய்யும் இடத்திற்கும் சென்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். சித்ரா தன்னுடன் வாழ மறுப்பதில் உறுதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த சரவணன், சித்ராவிற்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக உறவினர்களிடம் அவதூறு பரப்பியதுடன், சித்ராவின் வீட்டிற்குச் சென்று தொடர்ந்து தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு, இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், சித்ராவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். காலையில் குழந்தைகள் எழுந்து பார்த்தபோது தாய் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசாரும், டி.எஸ்.பி. சத்யராஜும் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அவரைக் கொலை செய்ததாகக் கூறி சரவணன் ஆத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ்…
மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய மின்வெட்டுப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே 20 லட்சத்திற்கும்…