மத்திய பிரதேச மாநிலம், சத்னா மாவட்ட ஹாஸ்பிடலில், தாலசீமியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. ஜார்கண்ட் போல, இங்கேயும் குழந்தைகளுக்கு HIV தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து எடுக்க பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அம்மாநில சுகாதார மற்றும் மருத்துவக் கல்வித் துறை ஆணையர் தருண் ரதி தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்ட ரத்தம் அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்டதா அல்லது தனியார் மையங்களில் ஏற்றப்பட்டதா என்பது குறித்தும், ரத்த தானத்தின் போது முறையான பரிசோதனைகள் (Screening) செய்யப்பட்டனவா என்பது குறித்தும் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…