நடிகை தமன்னா என்றாலே ஜெயிலர் படத்தில் காவலய்யா பாட்டுக்கு அவர் போட்ட குத்தாட்டம்தான் பெரும்பாலான ரசிகர்களுக்கு ஞாபகத்தில் வரும். அந்த அளவுக்கு அந்தப் பாடல் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களையும் மனங்களை அள்ளியெடுத்தவர் தமன்னா. அதேபோல் ஜெயிலர் 2 படத்திலும் ஒரு சூப்பர் குத்தாட்ட பாடல் காட்சியை ரசிகர்களுக்கு விருந்தாக தர படக்குழு தயாராகி விட்டது. ஜெயிலர் 2 படத்தில் நோரா பதேகி என்ற நடிகைதான் குத்தாட்டத்தில் நடனமாட இருக்கிறார். நடிகை நோரா பதேகி கனடாவை சேர்ந்தவர். பல இந்தி படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டவர்.
தெலுங்கு மலையாளத்தில் பல படங்களில் அவர் நடனம் ஆடியிருக்கிறார். பாகுபலி படத்தில் வரும் மனோகரி பாடலுக்கு ஆடியவர்தான் நோரா பதேகி. கார்த்தி நாகார்ஜூனா நடித்த தோழா படத்திலும் டோர் நம்பர் என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். 33 வயதான இவர் ஜெயிலர் 2 படத்தில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போடுவது உறுதியாகிவிட்டது. பாடல் காட்சியில் மட்டும் தான் வருகிறாரா அல்லது படத்திலும் நடித்திருக்கிறாரா என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…
மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…