தமிழ் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நம்ம வீட்டு பிள்ளையாக நடித்திருந்த சிவகார்த்திகேயனுக்கு மக்கள் தங்களது ஏகபோக வரவேற்பை கொடுத்தனர்.
இதையடுத்து மெல்ல மெல்லமாக தனது கெரியரில் முன்னேறி வந்த சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார். இவரது நடிப்பில் மாவீரன் மற்றும் அயலான் திரைப்படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பின் கீழ் சிவகார்த்திகேயன் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையில், சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னே ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது குழந்தை குகன் தாஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்தார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 13-வது திருமண நாளை கொண்டாடுகிறார். தனது மனைவி ஆர்த்திக்கு என் சந்தோச கண்ணீரே என பதிவு வெளியிட்டு அவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு….
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…