‘என் சந்தோச கண்ணீரே’… 13-வது திருமண நாளையொட்டி மனைவிக்கு வாழ்த்து கூறி சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம்…  குவியும் வாழ்த்துக்கள்…

By Begam on ஆவணி 27, 2023

Spread the love

தமிழ் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நம்ம வீட்டு பிள்ளையாக நடித்திருந்த சிவகார்த்திகேயனுக்கு மக்கள் தங்களது ஏகபோக வரவேற்பை கொடுத்தனர்.

   

இதையடுத்து மெல்ல மெல்லமாக தனது கெரியரில் முன்னேறி வந்த சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார். இவரது நடிப்பில்  மாவீரன் மற்றும் அயலான் திரைப்படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பின் கீழ் சிவகார்த்திகேயன் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

   

 

இதற்கிடையில், சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னே ஆர்த்தி என்பவரை திருமணம் செய்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது குழந்தை குகன் தாஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்தார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 13-வது திருமண நாளை கொண்டாடுகிறார். தனது மனைவி ஆர்த்திக்கு என் சந்தோச கண்ணீரே என பதிவு வெளியிட்டு அவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இப்பதிவினை பார்த்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு….