தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.
அப்படிப்பட்ட சிவாஜிக்கு நடிப்புக்காக ஒருமுறை கூட தேசிய விருது வழங்கப்படவில்லை. அதற்குக் காரணமாக சொல்லப்பட்டது, சிவாஜி கணேசன் ஒரு ஓவர் ஆக்டிங் நடிகர் என்ற விமர்சனங்கள்தான். தேசிய விருது குழுவில் இருக்கும் ஜூரிகளுக்கு சிவாஜி நடிப்பு பற்றி இத்தகைய ஒரு விமர்சனம் இருந்ததாக எழுத்தாளரும் நடிகருமான பாரதிமணி தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதே கருத்தைதான் எம் ஜி ஆர் ரசிகர்களும் சிவாஜி மேல் ஒரு குற்றச்சாட்டாக வைத்தனர்.
ஆனாலும் சிவாஜிக்கு வெறித்தரமான ரசிகர்கள் அவரது மறைவுக்குப் பின்னரும் இப்போது வரை இருக்கிறார்கள். அவரின் படங்கள் ரி ரிலீஸ் ஆகும்போதெல்லாம் அதைக் கொண்டாடி மகிழ்கின்றனர். சிவாஜியோடு நடித்த பலக் கலைஞர்கள் அவரைப் பற்றி வியந்தோதுவது அவரின் வித்தியாசமான நடிப்பைப் பற்றிதான். ஆனால் சிவாஜி, தனது நடிப்புக்கு முன்னோடிகளாக ஒருவரைக் கூறுவார் என்றால் அது எம் ஆர் ராதாவாக இருக்கும்.
இது பற்றி சிவாஜியே ஒருமுறை நடிகர் ராதாரவியிடம் பேசியுள்ளாராம். ஒருமுறை ராதாரவி, சிவாஜியின் வீட்டுக்கு சென்ற போது பேசிக்கொண்டு இருக்கும் போது “நான் உங்கப்பாவின் நடிப்பைக் காப்பி அடிச்சுதான் நடிப்பேன். அது தெரியுமா உனக்கு?.. ஆனால் சினிமாவில் வரும் எம் ஆர் ராதா இல்லை. நாடகத்தில் நடிக்கும் எம் ஆர் ராதா” எனக் கூறினாராம். இதை சமீபத்தில் ஒரு நேர்காணலில் ராதாரவி பகிர்ந்துள்ளார்.
அரசுப் பள்ளியா அல்லது தனியார் பள்ளியா என்ற குழப்பம் பல நடுத்தரக் குடும்பங்களை வாட்டும் ஒரு பொதுவான கேள்வி. உங்கள்…
மும்பையில் விஐபி வாகனம் செல்லும் போது போக்குவரத்து காவலர்களால் மிதிவண்டி ஓட்டுநர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அவமரியாதை குறித்து சிவசேனா…
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான வெள்ளப் பேரழிவிற்குப் பிறகு, பல நாட்களாகக் காணாமல் போன மனைவி உயிருடன் மீண்டு வந்து கணவரிடம்…
சிவானி தனது கணவனின் வீட்டில் தனது காதலரான பாஜக இளைஞர் தலைவர் புஷ்பேந்திர லோதியை ரகசியமாகச் சந்திக்க அழைக்க, அவரும்…
கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…
மதுநாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சித்திக் நகர், அஞ்சையா நகர் பகுதியில் மின்தாக்குதலுக்குள்ளாகி புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்…