Categories: சினிமா

“மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன்”.. என்ன எல்லாரும் மன்னிச்சிடுங்க.. நடிகர் பிரகாஷ் ராஜ் திடீரென வெளியிட்ட வீடியோ..!

Spread the love

சமூக ஊடகங்களில் சூதாட்டம் செய்திகளுக்கு விளம்பரம் செய்ததாக கூறி பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டா 19 பேர் மீது ஹைதராபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ராணா டகுபதி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் பாப்- அப் விளம்பரங்கள் மூலமாக ஜங்க்லி ரம்மியை விளம்பரப்படுத்தியதாக கூறப்படுகின்றது. விஜய் தேவார கொண்டா, மஞ்சு லக்ஷ்மி , பிரணிதா மற்றும் நிதி அகர்வால் உள்ளிட்டோர் பலவிதமான செய்திகளை பாப் அப் விளம்பரம் மூலமாக விளம்பரப்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த செயலிகள் என்னென்ன சம்பந்தப்பட்ட நபர்கள் யார் யார் இந்த செயலிகளின் ஆதாரம் என்ன மற்றும் பிற அம்சங்களை பார்ப்போம் எனவும் வழக்கின் தகுதி மற்றும் கிடைக்க கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த ஆன்லைன் தளங்களில் ஆயிரக்கணக்கான லட்ச ரூபாய் பணம் ஈடுபட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் அதிலும் குறிப்பாக நடுத்தர மற்றும் அடித்தட்டு வர்க்கத்தினர் துயரத்தில் மூழ்கியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில் இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், 2016 ஆம் ஆண்டு சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாகவும் தவறை உணர்ந்த பிறகு அதன் ஒப்பந்தத்தை நீடிக்க வில்லை என்றும் அதன் பிறகு அது போன்ற விளம்பரங்களில் தான் நடிக்கவில்லை என்றும் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டு வேறொரு நிறுவனம் அந்த நிறுவனத்தை வாங்கி மீண்டும் எனது வீடியோக்களுடன் விளம்பரம் செய்தனர்.

 

அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அது தவறு என்று நான் சொன்னதும் அவர்கள் நிறுத்தி விட்டார்கள் என்று பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இளைஞர்கள் சூதாட்ட செய்திகளில் பணத்தை இழந்து தங்களுடைய வாழ்க்கையை தொலைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் கூற வேண்டிய கடமை தனக்கு இருப்பதால் இந்த வீடியோவை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Nanthini

Recent Posts

ஐயோ… உள்ளே குட்டி மாட்டிக்கிச்சு… 3 வயது சிறுமியை ஆழமான… இடுடுக்கில் இறக்கி நாய்க்குட்டியைக் காப்பாற்றிய… திக் திக் நிமிடங்கள்…!!

சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…

39 minutes ago

ஐயோ… பணம் கொடுத்து என்னைக் சிக்கலில் மாட்டிட்டாங்க… மும்பை BKC-யில் தெலுங்கானா சுற்றுலாப் பயணி… கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது… மும்பையில் பரபரப்பு…!

மும்பை நகரில் சுற்றுலா வந்த தெலுங்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், இரண்டு பேரால் தாக்கப்பட்டுக் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

44 minutes ago

அடச்சீ… நீங்கயெல்லாம் என்ன ஜென்மம்… நிலத் தகராறில் நடுரோட்டில்… பெற்ற தாய், தந்தையை கட்டையால்… அடித்துத் துவைத்த கொடூர மகன்கள்… புனேவில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்…!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் இந்தாபூர் பகுதியில் நிலத்தகராறு காரணமாக இரண்டு மகன்கள் தங்கள் வயதான தாய்லாந்தையும் தந்தையையும் கட்டையால்…

46 minutes ago

கொஞ்சம் மிஸ் ஆனா உயிரே போயிருக்கும்…! மக்கள் கூட்டத்தில் அதிவேகமாக பைக் ஸ்டண்ட் செய்யும் வாலிபர்கள்… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தற்காலத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகன ஓட்டுதலை ஒரு சாதாரணப் பயணமாகப் பார்க்காமல், ஆபத்தான சாகசங்களை அரங்கேற்றும் தளமாக மாற்றிக்…

56 minutes ago

அம்மாடியோ… 200 வருசாமா பெண் குழந்தையே பிறக்கல… வம்சத்தின் முதல் மகளை திருவிழா மாதிரி வரவேற்ற குடும்பம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்பகுதியில்…

58 minutes ago

டேய்… என்னை தள்ளுரியா?… ரஷ்யக் கடையில் மனிதனையே திருப்பித் தாக்கிய… ஹூமனாய்டு ரோபோவின் வைரல் வீடியோ… நெட்டிசென்கள் ஷாக்…!

ரஷ்யாவில் உள்ள ஒரு மின்னணுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில், மனித உருவ ரோபோ ஒன்றை நபர் ஒருவர் தள்ளியதைத் தொடர்ந்து,…

60 minutes ago