கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (46) என்ற எலக்ட்ரீசியனுக்கும், அவரது மனைவி ஹசீனா பீவி (36) என்பவருக்கும் இடையே கடந்த சில காலமாகவே கடுமையான குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. மனைவி மீது சுரேஷுக்கு இருந்த தீராத சந்தேகமே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் முற்றவே, ஹசீனா பீவி மன்னாந்தலை காவல் நிலையத்தில் கணவனுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளார். போலீசார் இருவரையும் அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், தன் மீது போலீசில் புகார் அளித்ததால் சுரேஷுக்கு ஆத்திரம் மேலும் அதிகரித்துள்ளது.
வீட்டிற்கு வந்த பிறகும் தம்பதியினருக்கு இடையே விடிய விடிய வாக்குவாதம் நீடித்தது. அதிகாலை 5 மணி அளவில் சண்டை உச்சக்கட்டத்தை எட்டியபோது, இவர்களது 4 குழந்தைகளும் சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்துள்ளனர். அப்போது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சுரேஷ், தன் 4 பிள்ளைகளும் நேரில் பார்த்து கதறித் துடித்த கண் முன்னாடியே, கத்தியால் மனைவி ஹசீனா பீவியின் கழுத்தை கொடூரமாக அறுத்துக் கொலை செய்தார். இந்த திடீர் தாக்குதலால் ஹசீனா பீவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவியைக் கொலை செய்த சுரேஷ், எந்தவொரு பதற்றமும் பயமும் இல்லாமல் மிகக் கொடூரமாக அந்த கொலைக் கத்தியை வாஷ்பேசினில் கழுவி சுத்தம் செய்துள்ளார். பின்னர் பாத்ரூமிற்குச் சென்று தன் கைகளையும் கழுவிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டார். பெற்ற தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த குழந்தைகள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹசீனா பீவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, தப்பியோடிய கொடூர கணவன் சுரேஷைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு…
மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், சில நாட்களுக்கு முன்பு தனது பைக்கில்…
: அதிமுகவில் கடந்த 2022-ஆம் ஆண்டு தலைமை பதவியைக் கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான…
நீலத்திற்கும் தீன்தயாலுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, தீன்தயால் தனது மனைவி நீலத்தை அடிக்கடி கொடுமைப்படுத்தியும்,…
சென்னை மாநகராட்சிப் பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது, தவெக எம்.எல்.ஏ பல்லவி அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகாருக்குச்…
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில்…