டீ குடிக்க கூப்பிட்ட பெண்… வீட்டிற்குள் காத்திருந்த எச்.ஐ.வி பேரதிர்ச்சி… 70 வயது முதியவருக்கு நடந்த கொடூரம்…!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், சில நாட்களுக்கு முன்பு தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் நின்றிருந்த ஒரு பெண், தனக்குக் காலில் கடுமையான வலி இருப்பதாகக் கூறி முதியவரிடம் நயமாகப் பேசி ‘லிப்ட்’ கேட்டுள்ளார். பரிதாபப்பட்டு அந்தப் பெண்ணை பைக்கில் ஏற்றிய முதியவர், அவரைப் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார். உதவியதற்கு நன்றிக் கடனாக வீட்டிற்குள் வந்து டீ குடித்துவிட்டுச் செல்லுமாறு அந்தப் பெண் உபசரிக்க, அதை நம்பி உள்ளே சென்ற முதியவர், அங்கு விரிவிக்கப்பட்டிருந்த ஆசை வலையில் வீழ்ந்துள்ளார்.

முதியவருக்குத் தெரியாமல் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசியக் கேமராக்கள் அனைத்தையும் பதிவு செய்துகொண்டிருந்தன. சிறிது நேரத்தில், அந்தப் பெண்ணின் கூட்டாளிகள் திடீரென கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து முதியவரைச் சுற்றி வளைத்தனர். “இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவோம், போலீசில் பாலியல் புகார் கொடுப்போம்” என்று மிரட்டி, அவரிடமிருந்து 7 லட்சம் ரூபாய் பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். மானத்திற்குப் பயந்த முதியவர், முதற்கட்டமாக 5,000 ரூபாயைக் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்திற்காகத் தனது விவசாய நிலத்தையே விற்கத் துணிந்துள்ளார். ஒருகட்டத்தில் மிரட்டல் பொறுக்க முடியாமல், அவர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.

விவசாயி கொடுத்த புகாரின் பேரில் களமிறங்கிய போலீஸார், அந்தப் பெண் உட்பட மோசடி கும்பலை அதிரடியாகக் கைது செய்தனர். வழக்கமாக சிறையில் அடைப்பதற்கு முன் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையின் போதுதான், அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி (HIV) பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர் கடந்த 3 ஆண்டுகளாக இதற்காகத் தீவிரச் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், அந்தப் பெண்ணின் வீட்டில் நடத்திய அதிரடிச் சோதனையில் ஒரு லேப்டாப்பைக் கைப்பற்றினர்.

அந்த லேப்டாப்பைத் திறந்து பார்த்த போலீஸாருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதில், எச்.ஐ.வி பாதித்த அந்தப் பெண்ணுடன் வெவ்வேறு ஆண்கள் உல்லாசமாக இருக்கும் 16 வீடியோக்கள் இருந்தன. திட்டமிட்டுப் பணம் பறிப்பதற்காக, அந்தப் பெண் மூலம் அந்த 16 நபர்களுக்கும் எச்.ஐ.வி தொற்று பரவியிருக்கலாம் என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது அந்த வீடியோக்களில் உள்ள நபர்களைத் தேடிப் பிடித்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் தீவிர முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர். ஒரு சாதாரண ‘லிப்ட்’ விவகாரம், இன்று நாடு தழுவிய அளவிலான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக வெடித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது.

Nanthini

Recent Posts

அவதூறு நபரை சந்தித்தாரா ஸ்டாலின்..? தரம் தாழ்ந்த பதிவுகளுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி.. தற்போதைய CM விஜய்யின் மாஸ் நடவடிக்கை..!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் ஆபாசப் பதிவுகளைப் பரப்புபவர்கள்…

26 seconds ago

2028-ல் மனிதன் அங்கே போவான்.. 5079-ல் உலகம் அழியும்.. பாபா வாங்காவின் அடுத்தடுத்த பகீர் கணிப்புகள்.. உறைந்து போன உலகம்..!!

உலகின் மிகச்சிறந்த மற்றும் மர்மமான தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர்.…

2 minutes ago

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! அம்மா உணவகத்திற்குள் நுழைந்த வீணா காயத்ரி… அங்கு நடந்தது என்ன..?!

புகழ்பெற்ற கர்நாடக இசை வீணை கலைஞரான வீணா காயத்ரி, சென்னை மந்தைவெளியில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு…

12 minutes ago

திமுகவில் ஒட்டுமொத்தமாக மாறப்போகும் நிர்வாகிகள்?…. லிஸ்ட்டில் இருக்கும் டாப் தலைவர்கள்… ஸ்டாலினின் ‘ஆபரேஷன் க்ளீன்-அப்’…!

தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் திருச்சி…

13 minutes ago

“பெண்ணை கட்டிப்போட்டு அண்ணனும் தம்பியும் செய்த காரியம்.. செல்போனில் வீடியோ எடுத்த அவலம்.. ஆந்திராவில் அரங்கேறிய பயங்கர சம்பவம்”..!!

ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 3 மகள்களுடன்…

16 minutes ago

BREAKING: திமுக -காங்., கூட்டணி… திடீர் திருப்பம்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த…

16 minutes ago