Categories: சினிமா

நான் நடிச்ச எல்லாப் படமும் எனக்குப் பிடித்தவை இல்லை.. என்ன இப்படி சொல்லிட்டாங்க?

Spread the love

பாரதிராஜாவால் மண்வாசனைப் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ரேவதி. அந்த படம் வெற்றிப் பெற்றதை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தார். தேவர்மகன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் பல விருதுகளையும் வாங்கி உள்ளார் .

திருமணம், குடும்பம் என செட்டிலான இவர் திரும்பவும் பல ஆண்டுகளுக்கு பின் தனுஷின் பவர் பாண்டி ,திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது 58 வயதாகும் இவர் சமீப காலமாகவே படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சலாம் வெங்கி என்ற ஹிந்தி படத்தை இயக்கினார்.

சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கலக்கி வந்த நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஒன்றாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். அதன் பிறகு நடிகை ரேவதி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு தனக்கு ஐந்து வயதில்  ஒரு பெண் குழந்தை இருப்பதாக திடீரென கூறினார். தற்போது தனிப் பெற்றோராக குழந்தையை வளர்த்து வரும் அவர் ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிறார்.

ரேவதி, தான் கதாநாயகியாக நடித்த போதே கிளாமர் வேடங்களில் நடித்ததில்லை. அதே போல தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக மட்டும் தேர்ந்தெடுத்து நடித்தார். அப்படி இருந்தும் தான் நடித்த அனைத்துப் படங்களும் தனக்குப் பிடித்து, விரும்பி நடித்த படங்கள் இல்லை என அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள “ஒரு கட்டத்தில் நான் எனக்குப் பிடிக்காத படங்களில் கூட வேறு வழியில்லாமல் நடித்தேன். சினிமா என்பது என்னைப் பொறுத்தவரை பணம் சம்பாதிக்கும் வழி மட்டும் இல்லை. சினிமாவை நான் காதலிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

வெறும் ஆரம்பம் தான்… 25 நாட்களில் 18,600 கோடி முதலீடு.. கெத்து காட்டிய முதல்வர் விஜய்….. தமிழகத்தை மாற்றப்போகும் ‘அந்த’ 3 திட்டங்கள் என்ன தெரியுமா…?

தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…

4 minutes ago

“அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி”.. நயினார் நாகேந்திரனிடம் சிக்கிய அந்த ‘ரகசிய’ கடிதம்?… பாஜகவை அதிரவைத்த அந்த ஒரு சீக்ரெட்….!

தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…

10 minutes ago

காலையில் வேலைக்கு வந்த ஐடி ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… இரவோடு இரவாக மூடப்பட்ட கம்பெனி.. 700 பேர் கதி என்ன…?

கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…

13 minutes ago

நெருப்பாக மாறப்போகும் பூமி… ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தும் அந்த ‘ஒரு’ இயற்கை விபரீதம்… அடுத்த 3 மாதங்களுக்கு காத்திருக்கும் பேரழிவு….!

உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்கனவே உலகின் பல நாடுகள் வரலாறு காணாத வெயிலைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில், வரும்…

16 minutes ago

“எல்லாம் போச்சு”… சொந்த மகள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை…. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்….!

தமிழ்நாடு இந்தியாவிலேயே முற்போக்கான மற்றும் சமூக சீர்திருத்தங்கள் நிறைந்த ஒரு மாநிலமாகத் திகழ்ந்தபோதிலும், காதல் திருமணங்களுக்கு எதிரான சமூகக் கெடுபிடிகளும்…

20 minutes ago

“சென்னையில் பயங்கரம்: ரேபிடோ பைக்கில் அலுவலகம் சென்ற ஐடி பெண் ஊழியர்.. கார் மோதி பலி…!”

சமீபகாலமாகவே சாலைகளில் வாகனங்களின் வேகம் அதிகரித்து, விபத்துக்களும் தொடர்கதையாகி வருகின்றன. பைக் மற்றும் கார்களில் செல்பவர்கள் போதிய நிதானமின்றி, அதீத…

22 minutes ago