“சென்னையில் பயங்கரம்: ரேபிடோ பைக்கில் அலுவலகம் சென்ற ஐடி பெண் ஊழியர்.. கார் மோதி பலி…!”

Spread the love

சமீபகாலமாகவே சாலைகளில் வாகனங்களின் வேகம் அதிகரித்து, விபத்துக்களும் தொடர்கதையாகி வருகின்றன. பைக் மற்றும் கார்களில் செல்பவர்கள் போதிய நிதானமின்றி, அதீத வேகத்தில் வாகனங்களை இயக்குவதால் பல இன்னுயிர்கள் பறிபோகின்றன. இந்த அஜாக்கிரதைக்குச் சம்பந்தமே இல்லாத அப்பாவி பொதுமக்களும், பாதசாரிகளும் பலியாவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னையில் தற்போது பைக்கில் பயணித்த இளம்பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கோமதி என்ற இளம்பெண், ராமாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் இன்று காலை எப்போதும் போல தனது பணிக்குச் செல்வதற்காக ரேபிடோ பைக் புக் செய்து அதில் பயணித்துள்ளார். வானகரம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் எதிர்பாராத விதமாக மிக வேகமாக வந்த கார் ஒன்று, இவர்கள் சென்ற பைக் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது.

இந்த கொடூர விபத்தில் பைக் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தூக்கி வீசப்பட்ட கோமதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ரேபிடோ பைக் ஓட்டுநர் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய காரை ஓட்டியது யார் என்று தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, காரின் எண்ணை வைத்து குற்றவாளியைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Swetha

Recent Posts

“எங்களை அவமானப்படுத்தவே கூப்பிட்டிருக்காங்க” மேயர் பிரியாவுக்கு எதிராகத் தவிக எம்.எல்.ஏ பல்லவி பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…

11 minutes ago

“விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்… கடுப்பான திமுக” – ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை அதிரடியாக புறக்கணித்த ஸ்டாலின்..!!

நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…

13 minutes ago

லஞ்சப் பணத்திற்காக இப்படியா செய்வாங்க?.. சிறுமியின் காலை மீண்டும் உடைத்த டாக்டர்.. அரசு மருத்துவனையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…

14 minutes ago

“இனி உங்களுக்கும், எங்களுக்கும் சம்மந்தமில்ல” காங்கிரஸிற்கு ஷாக் கொடுத்த திமுக… ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

19 minutes ago

அம்மா உயிரோடு இருக்காங்களா?!”.. வெள்ளத்தில் தவிக்கும் பச்சிளம் குழந்தையின் பகீர் வீடியோ.. கதறும் நெட்டிசன்கள்..!!!

வெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தன் தாயை இழந்துவிட்டோம் என்ற உண்மை கூடத் தெரியாமல், யாரோ ஒருவரால் இழுத்துச் செல்லப்படும்…

23 minutes ago