காலையில் வேலைக்கு வந்த ஐடி ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… இரவோடு இரவாக மூடப்பட்ட கம்பெனி.. 700 பேர் கதி என்ன…?

Spread the love

கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். இதன் காரணமாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் தழைத்தோங்கி வளர்ந்துள்ளன. எனினும், மறுபுறம் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான இன்ஜினியர்கள் படித்து முடித்து வெளியே வருவதால், கடுமையான போட்டி நிலவி பலருக்கு தகுதியான வேலை கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் கிடைக்கும் வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். மேலும், சமீபகாலமாக முன்னணி ஐடி நிறுவனங்கள் கூட தங்களது ஊழியர்களை திடீரென வேலை நீக்கம் செய்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இயங்கி வந்த ‘திங்க் டெக்னாலஜிஸ் இந்தியா’ என்ற ஐடி நிறுவனம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இரவோடு இரவாக தனது அலுவலகத்தை மூடிவிட்டுச் சென்றுள்ளது. வழக்கம்போல காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள், நிறுவனம் மூடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த திடீர் முடிவால் அங்கு பணிபுரிந்து வந்த 700-க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் ஒரே நாளில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

பண நெருக்கடி காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதலே அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, வேலைக்கு சேரும்போது லேப்டாப் வைப்புத் தொகையாக ஊழியர்களிடம் பெறப்பட்ட தலா 15 ஆயிரம் ரூபாயையும் திருப்பிக் கொடுக்காமல் இந்நிறுவனம் ஏமாற்றியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், தற்போது அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், நிறுவனத்தின் மனிதவள அதிகாரிகள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“எங்களை அவமானப்படுத்தவே கூப்பிட்டிருக்காங்க” மேயர் பிரியாவுக்கு எதிராகத் தவிக எம்.எல்.ஏ பல்லவி பரபரப்புக் குற்றச்சாட்டு..!!

சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…

5 minutes ago

“விஜய்யுடன் கைகோர்த்த காங்கிரஸ்… கடுப்பான திமுக” – ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தை அதிரடியாக புறக்கணித்த ஸ்டாலின்..!!

நீட் தேர்வு முறைகேடுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய மக்கள் நல்வாழ்வு…

7 minutes ago

லஞ்சப் பணத்திற்காக இப்படியா செய்வாங்க?.. சிறுமியின் காலை மீண்டும் உடைத்த டாக்டர்.. அரசு மருத்துவனையில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இங்குள்ள ஒரு ஏழைப் பெண்ணின் மகளுக்குக்…

7 minutes ago

“இனி உங்களுக்கும், எங்களுக்கும் சம்மந்தமில்ல” காங்கிரஸிற்கு ஷாக் கொடுத்த திமுக… ஸ்டாலின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…

13 minutes ago

அம்மா உயிரோடு இருக்காங்களா?!”.. வெள்ளத்தில் தவிக்கும் பச்சிளம் குழந்தையின் பகீர் வீடியோ.. கதறும் நெட்டிசன்கள்..!!!

வெள்ளத்தின் கொடூரப் பிடியில் சிக்கித் தன் தாயை இழந்துவிட்டோம் என்ற உண்மை கூடத் தெரியாமல், யாரோ ஒருவரால் இழுத்துச் செல்லப்படும்…

17 minutes ago